இசைப்பயிற்சி ஆசிரியையான ஸ்ரேயா சரண் ஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இசைப்பயிற்சி ஆசிரியையாக பணியில் சேர்கிறார் .
அதே பள்ளியில் நாடக ஆசிரியராக வேலை செய்யும் சர்மன் ஜோஷி ஸ்ரேயா சரணுடன் நெருங்கி பழக , தான் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் வீடு பார்த்து தருகிறார் .
நட்பின் அடிப்படையில் இருவரும் சேர்ந்து இசை பள்ளி ஒன்றை தொடங்குகின்றனர் .
‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்யும் ஸ்ரேயா சரண் சர்மன் ஜோஷி மாணவ, மாணவிகளுக்கு இசையுடன் நாடக பயிற்சி அளிப்பதோடு, நாடக பயிற்சிக்காக மாணவ, மாணவிகளை கோவா அழைத்து செல்கிறார்கள்.
இதனிடையே மாணவ, மாணவியர்களில் கமிஷனர் பிரகாஷ்ராஜின் மகளும் ,நேபாள மாணவனும் நட்பாகி பின் காதலர்களாகின்றனர்
கோவாவில் இசை , நாடக பயிற்சியை முடித்து அனைவரும் ஹைதராபாத் திரும்பும் நேரத்தில், மாணவிகளில் ஒருவரான கமிஷனர் பிரகாஷ்ராஜின் மகள் உடனிருக்கும் நேபாள மாணவனுடன் மாயமாகிறார்.
இந்த தகவல் பிரகாஷ் ராஜுக்கு தெரியவர, அவரது உத்தரவில் ஹைதராபாத் போலீசார் பிரகாஷ் ராஜ் மகளை தேடும் நிலையில் ஹைதராபாத்தில் அரங்கேற இருக்கும் நாடக நிகழ்ச்சியை நிறுத்தி ஸ்ரேயா சரணையும் சர்மன் ஜோஷியையும் கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியை போலீசார் எடுக்கின்றனர் .
மாயமான பிரகாஷ்ராஜின் மகளும் ,நேபாள மாணவனும் ஹைதராபாத் போலீசார் கண்டுபிடித்தார்களா ?
ஸ்ரேயா சரணும் - சர்மன் ஜோஷியும் திட்டமிட்டபடி நாடகத்தை அரங்கேற்றினார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'மியூசிக் ஸ்கூல்'
கதையின் முக்கிய பாத்திரங்களாக இசைப்பயிற்சி ஆசிரியையாக ஸ்ரேயா சரண் , நாடக ஆசிரியராக சர்மன் ஜோஷி கதையுடன் இணைந்து கதாபாத்திரத்துடன் பயணிக்கின்றனர்.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் ,ஷான் கிரேசி கோஸ்வாமி ,ஓஸு பருவா , பெஞ்சமின் கிலானி ,சுஹாசினி முலே,பக்ஸ் பார்கவா ,லீலா சாம்சன் ,ஸ்ரீகாந்த் ஐயங்கார் ,வினய் வர்மா ,மங்களா பட் என நடிகர்கள் அனைவரும் நடிப்பில் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
படத்திற்கு பக்க பலமாக இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ரசிக்கும் ரகம் , புதுமையான இசையுடன் மேற்கத்திய இசையில் அசத்தலான பின்னணி இசையை ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்துள்ளார் இளையராஜா.
ஒளிப்பதிவாளர் கிரண் டியோஹன்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !
‘படிக்கும் மாணவர்களை படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்க அழுத்தம் கொடுக்காமல் அவர்கள் மனதில் உள்ளதை புரிந்து கொண்டு மற்ற விஷயங்களில் முன்னுரிமை கொடுத்து பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வுடன் சவுண்ட் ஆஃப் மியூசிக்’ என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காக இசையை விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு இசையுடன் நாடக பயிற்சி அளிக்கும் கதையை மையமாக கொண்டு ,,,படம் முழுவதும் பாடல்கள் இருந்தாலும் , இளம் ஜோடியின் மெல்லிய காதலுடன் அதனை அழகாக இசையுடன் சேர்ந்து ரசிக்கும்படி காட்சிகள் அமைத்து இதுவரை பார்க்காத வழக்கமான கதையிலிருந்து மாறுபட்டு குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் பாடல்கள் நிறைந்த அழகான இசை நாடகமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாப்பா ராவ் பிய்யாலா,
ரேட்டிங் 3. / 5
Comments