top of page
mediatalks001

'கழுவேத்தி மூர்க்கன்' - விமர்சனம் !


ராமநாதபுர மாவட்டத்தில் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் அருள்நிதியும், சந்தோஷ் பிரதாப்பும் .இரு சமூக மக்கள் வாழும் ஊரில் சந்தோஷ் பிரதாப் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் , அருள்நிதி உயர் சாதியை சேர்ந்தவர் , அருள் நிதியின் உயிர் நண்பனாக இருக்கும் சந்தோஷ் பிரதாப் கிராமத்தில் உள்ள மாணவ -மாணவிகள் படிப்பில் சிறந்து விளங்க அவர்களுக்கு ஆசிரியராகவும் , சமூக பொறுப்பாளராக மக்கள் நலனில் உறுதுணையாக இருந்து சமூக சிந்தனையாளராக வாழ்ந்து வருகிறார் .


இவர்களின் நட்பு அரசியல்வாதி ராஜ சிம்மனின் அரசியல் வாழ்விற்கு தடையாய் நிற்கிறது. அருள்நிதியின் தந்தையான யார் கண்ணனுக்கு பதவி ஆசை காட்டி,,,, அவரது சூழ்ச்சியினால் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்கிறார் ராஜ சிம்மன்.

ஒரு கட்டத்தில் யார் கண்ணனை காப்பாற்ற போகும் அருள்நிதி மீது கொலை பழி விழுகிறது. தனி படை அமைத்து போலீஸ் அருள்நிதியை தேட, சந்தோஷ் பிரதாப் கொலைக்கு காரணமான,,,,, யார் கண்ணனுடன் ,,அரசியல்வாதி ராஜ சிம்மன் உட்பட அனைவரையும் வெறித்தனமாக வெட்டி கொலை செய்கிறார் அருள்நிதி.


இச் சூழ்நிலையில் அருள்நிதியை என்கவுண்டர் உத்தரவுடன் தேடும் போலீஸ் ,, முடிவில் அவரை கைது செய்து என்கவுண்டரில் சுட்டு கொன்றார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'கழுவேத்தி மூர்க்கன்'



நாயகனாக நடித்துள்ள அருள்நிதி, கம்பிரமான தோற்றத்தில் மூர்க்க சாமி கதாபாத்திரத்தில் காதல் காட்சிகளில் காதல் நாயகனாகவும் ,,,,, நண்பனை கொன்றவர்களை பழி வாங்கும் காட்சிகளில் வெறித் தனமான அதிரடி ஆக்க்ஷன் நாயகனாக சிறப்பான நடிப்பில் அசத்துகிறார் .


அருள்நிதிக்கு இணையான கதாபாத்திரத்தில் பூமியாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

கதைக்கேற்றபடி ரசிகர்களை ஈர்க்கும் நடிப்பில் நாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன்

ரசிகர்களின் மனதை கவரும் நடிப்பில் மற்றொரு நாயகியாக வரும் சாயா தேவி,

குணசித்திரமான நடிப்பில் முனிஸ்காந்த் இயல்பாக நடித்துள்ளார் .இவர்களுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சரத் லோகித்தாஷ்வா,யார் கண்ணன்,பத்மன்,ஜக்குபாண்டி


டி இமானின் இசையில் பாடல்களும் திரைக்கதையின் வேகத்திற்கு இணையான ,பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்


ஶ்ரீதரின் ஒளிப்பதிவில் காட்சிகளில் மண்ணின் மணம் மாறாத கிராமத்து அழகு!



சமூகம் வேறுபட்டாலும் உயிர் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கும் நண்பன்,,,, இந்த கதையை மையமாக வைத்து ,,, நேர்த்தியான திரைக்கதை அமைப்புடன் வித்தியாசமான தோற்றத்தில் மூர்க்க குணம் கொண்டவராக அருள்நிதியின் கதாபாத்திரத்தை வடிவமைத்த வகையிலும் ,நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணிக்குமளவில் காட்சிகள் அமைத்து,,,உணர்வுபூர்வமான கதையுடன் ஆக்க்ஷனையும் சேர்த்து அனைவரும் ரசிக்கும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் ராஜ்.


ரேட்டிங் ; 3.5 / 5



Comments


bottom of page