top of page
mediatalks001

' பெல் ' - விமர்சனம் !


பழங்கால சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகளில் ஒன்றான நிசம்ப சூதனி என்ற மா மருந்தை பாதுகாத்து வருகிறார் நிதீஷ்

இந்த நிசம்ப சூதனி மருந்தை கண்டுபிடித்து வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதிக்க நினைக்கிறார் குரு சோமசுந்தரம். இதற்காக பல சூழ்ச்சிகள் செய்து நிதீஷிடம் இருந்து அந்த மருந்தை கைப்பற்ற நினைக்கிறார் குரு சோமசுந்தரம்.


முடிவில் நிதீஷிடம் இருந்து நிசம்ப சூதனி மருந்தை குரு சோமசுந்தரம் கைப்பற்றினாரா? நிசம்ப சூதனி மருந்தை நிதீஷ் பாதுகாக்க காரணம் என்ன?என்பதை சொல்லும் படம்தான் 'பெல்'


நாயகனாக நடித்துள்ள நடன இயக்குனர் ஸ்ரீதர் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவருக்கு இணையாக மற்றோரு நாயகனாக நடித்து இருக்கும் நித்தீஷ் சிறப்பாக நடித்து இருக்கிறார். வில்லனாக மிரட்டலான நடிப்பில் குரு சோமசுந்தரம்.மற்றும் படத்தில் நடித்த நாயகிகளாக நடித்தவர்கள் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர்



மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலே கதைக்களம் என்பதால் காட்சிகள் பசுமையாக அமைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரணிகண்ணன். இராபர்ட்டின் இசையில் பாடல்களும் . பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்



சித்த மருத்துவத்தின் அவசியத்தையும், பெருமையையும் வைத்து அனைவரும் ரசிக்கும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட்புவன்.

Comments


bottom of page