காட்டு மன்னார்கோவில் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் விவசாயக் கூலியான சார்லி முதல் மனைவி இறந்துவிட,இரண்டாம் மனைவி சூசன் ஜார்ஜ், மகள் மோனிகா சிவா, மகன் சக்தி ரித்விக், கைக்குழந்தை மற்றும் தாய் பரவை சுந்தராம்மாள் ஆகியோருடன் வாழ்ந்து வரும் நிலையில் .,,, m s பாஸ்கரிடம் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறார் .
இந் நேரத்தில் சார்லியை வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்ப தர சொல்லி ஊர் மக்கள் அனைவரது முன்னிலையில் m s பாஸ்கர் அவமானப்படுத்துகிறார் .
கந்து வட்டி தொழில் செய்யும் m s பாஸ்கருக்கு வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்ப கொடுக்க சூசன் ஜார்ஜ்வுடன் கரும்பு வெட்டும் வேலைக்காக 15 நாட்கள் சார்லி வெளியூர் செல்கிறார்.
சார்லியும் சூசன் ஜார்ஜ்ம் இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும் ஒரு கிராம் மோதிரத்தை பேரன் சக்தி ரித்விக்கு ஆசையாக கை விரலில் போடுகிறார் பாட்டி பரவை சுந்தராம்மாள்.
சக்தி ரித்விக் விளையாடும்போது மோதிரத்தை தொலைத்து விட ,,,என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் மோனிகா சிவா மற்றும் சக்தி ரித்விக், தொலைந்த மோதிரத்தை தேடி அலைகிறார்கள்.
எங்கு தேடியும் மோதிரம் கிடைக்காததால் தம்பியை காப்பாற்ற அதற்கான பணத்தை சேமித்து புதிய மோதிரம் வாங்க சிறு சிறு வியாபார வேலைகளை இருவரும் யாருக்கும் தெரியாமல் செய்கின்றனர் ,
முடிவில் சித்தி வீடு திரும்புவதற்குள் புதிய மோதிரம் வாங்கி,,, இருக்கும் இடத்தில் மோனிகா சிவா வைத்தாரா ?
m s பாஸ்கருக்கு வாங்கிய பணத்தை வட்டியுடன் சார்லி திரும்ப கொடுத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ' எறும்பு '
கதைக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சார்லி குடும்ப வறுமை சூழலில் தன் பிள்ளைகளை வளர்க்கும் பாசமுள்ள தந்தையாகவும் m s பாஸ்கரிடம் அவமானப்படும்போது குணசித்திர அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் .
சார்லியின் குழந்தைகளாக நடித்திருக்கும் மோனிகா சிவா , சக்தி ரித்விக் இரண்டாம் மனைவியாக வரும் சூசன் ஜார்ஜ் ,,எம்.எஸ்.பாஸ்கர் ,, ஜார்ஜ் மரியான் என அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
கே.எஸ்.காளிதாஸின் ஒளிப்பதிவும் , இசையமைப்பாளர் அருண் ராஜின் இசையும் படத்திற்கு பக்க பலம் !
குடும்ப வறுமை காரணமாக வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் விவசாயக் கூலியின் கதையை மையமாக கொண்டு இயல்பான திரைக்கதையில் எதிர்பாராத திருப்புமுனையான க்ளைமாஸ்க்குடன் அனைவரும் பாராட்டும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுரேஷ் ஜி.
ரேட்டிங் ; 3 / 5
Commentaires