தேனி மாவட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் வாழும் கணவனை இழந்த வயதான ரோகிணிக்கு நான்கு மகள்கள் இரண்டு மகன்கள்.
குடும்ப பிரச்சனையால் மனதால் நொந்து போன ரோகிணி உடல் நிலை சரியாமல் இருக்கும் நேரத்தில் காணாமல் போக,, தனது அப்பத்தாவை கண்டுபிடித்து தருமாறு ரோகிணியின் பேரன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க, வில்லங்க கிராமமான கிடாரிப்பட்டி பேரை கேட்டதும் போலீசார் அனைவரும் புகாரை வாங்க மறுக்கின்றனர்,
இந் நிலையில் போலீசார் உட்பட மேலதிகாரியின் பேச்சை மதிக்காமல் அந்த ஊருக்கு மாற்றலாகி வேலைக்கு சேர்ந்த
போலீஸ் கான்ஸ்டபிள் பசுபதி ரோகிணியின் பேரனுடன் சேர்ந்து
தேனி பஸ் நிலையம் அருகே ரோகிணியை கண்டுபிடிக்கிறார்.
பசுபதி கண்டுபிடித்த ரோகிணி மயக்க நிலையில் உடல் நிலை மோசமாகி சில மணி நேரங்களில் இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு கான்ஸ்டபிள் பசுபதி எடுத்துச் செல்கிறார்.
ஊர் மக்கள் திரண்ட நிலையில் ரோகிணியின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட ,,,இறந்த தாயின் காதில் இருக்கும் தண்டட்டியை யாருக்கும் தெரியாமல் திருட்டுவதற்கான திட்டம் போடுகிறார் ரோகிணியின் கடைசி மகள்,
இந் நேரத்தில் காலை விடிந்தவுடன் ரோகிணியின் காதில் இருக்கும் தண்டட்டி காணாமல் போய்விடுகிறது.
காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடிக்க அனைவரையும் விசாரிக்க பசுபதி ஈடுபடும்போது ரோகிணியின் மகள்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு புரள்கின்றனர் ,,,மறுபக்கம் எப்போதும் குடி போதையில் இருக்கும் விவேக் பிரசன்னா கையில் அரிவாளுடன் பசுபதியை மிரட்டி கொண்டிருக்க ,,,ஊர் மக்கள் முன்னிலையில் காணாமல் போன தண்டட்டியால் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார் பசுபதி.
முடிவில் தண்டட்டியை திருடியது யார் என பசுபதி கண்டுபிடித்தாரா ?
எந்த போலீசும் கிடாரிப்பட்டி பேரை கேட்டதும் புகாரை வாங்க மறுக்கும்போது எதற்காக பசுபதி அந்த கிராமத்துக்கு செல்கிறார் ? அதற்கான காரணம் என்ன ? என்பதை சொல்லும் படம் தான் ‘தண்டட்டி’
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் போலீசாக நடித்துள்ள பசுபதி ,,ஊர் மக்கள் செய்யும் அலப்பறையான காட்சிகளிலும் ,,ரோகிணியின் மகள்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு புரளும்போது அவர்களை தடுக்கும் காட்சிகளிலும் சுப்பிரமணி கதாபாத்திரமாக இயல்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் !
வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோகிணி கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
ரோகிணியின் குடிகார மகனாக வரும் விவேக் பிரசன்னா ,, இளமையில் ரோகிணியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி,,,மகள்களாக நடிக்கும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம், தண்டட்டி அணிந்து கொண்டு பசுபதியை கலாய்க்கும் வயதான பாட்டிகள் மற்றும் ஊர் மக்களாக நடித்த நடிகர்கள் அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும் கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையும் அசத்தல் !
பாராட்டும்படியான மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு,,,
வயதான காலத்தில் பெண்கள் அணியும் தண்டட்டியை மையமாக வைத்து
,,, இறந்து போன ரோகிணியின் காதில் இருக்கும் தண்டட்டி காணாமல் போய்விட... காணாமல் போன அந்த தண்டட்டியை கண்டுபிடிக்க போலீஸ் கான்ஸ்டபிள் பசுபதி எடுக்கும் முயற்சியை,, விறு விறுப்பான கதை களத்துடன் துக்க வீட்டில் உறவினர்களுக்கு இடையே நடக்கும் அடிதடி மோதல்கள் ,, படம் முழுவதும் வரும் இயல்பான காட்சிகளாக ஒப்பாரி வைத்து அழும் பாட்டிகள்,,, ரசிகர்களின் சிரிப்பலையில் தண்டட்டி அணிந்த வயதான பாட்டிகள் பசுபதியை கலாய்க்கும் காட்சிகள்,,, என வேக தடையில்லாத நகைச்சுவை கலந்த திரைக்கதையுடன் யாருமே யூகிக்க முடியாத எதிர்பாராத திருப்புமுனையான க்ளைமாஸ்க்குடன் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குநர் ராம் சங்கையா.
ரேட்டிங் ; 3 .5 / 5
Comentários