பல ஆண்டுகளுக்கு முன் மாந்திரிகம் நரபலி ஆகியவற்றை செய்யும் நாயாடி சமூகத்தை சேர்ந்த தம்பதியை ஊர் மக்கள் எரித்து கொன்று விடுகிறார்கள். இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும் பேய்களை பற்றி ஆய்வு செய்து அதனை யூடியூபில் பதிவு செய்யும் வேலையை ஆதர்ஷ் மதிகாந்தம் ,அரவிந்த்சாமி, நிவாஸ், பெபியன் ,காதம்பரி,,ஆகிய ஐந்து பேரும் செய்கின்றனர் .
இந்த ஐந்து பேரிடம் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் தான் பழைய பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாகவும் அதில் பேய் இருப்பதாக அருகில் உள்ளவர்கள் சொல்வதால் நீங்கள் அதனை ஆய்வு செய்து உங்கள் யூடியூப் சேனலில் பதிவிட வேண்டும் என ஒருவர் சொல்கிறார் .
அவர் சொல்வதை கேட்டு ஐந்து பேரும் அந்த காட்டிற்குள் செல்கின்றனர். காட்டில் உள்ள அந்த பங்களாவில் அவர்கள் இருக்கும்போது அமானுஷ்ய சக்தி தங்களை பின் தொடர்வது அவர்களுக்கு தெரிகிறது.
தொடர்ந்து அங்கிருந்து தப்பி செல்ல அவர்கள் வெளியே வரும்போது அந்த அமானுஷ்ய சக்தி ஒவ்வொருவரையும் கொலை செய்கிறது.
முடிவில் அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா?
திட்டமிட்டு இந்த ஐந்து பேரையும் பேயை பற்றி ஆய்வு செய்ய சொன்ன அந்த மர்ம மனிதன் யார் ? என்பதை திகிலான திரைக்கதையுடன் சொல்லும் படம்தான் 'நாயாடி'
நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்தம் கதையின் தன்மை அறிந்து கதாபாத்திரத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகியாக காதம்பரி கதைக்கேற்றபடி நடிப்பதுடன் கிளைமாஸ்க்கில் மிரட்டலான நடிப்பில் அசத்துகிறார் !
நிவாஸ் ,பெபியன், சரவணன், அரவிந்த்சாமி , ரவிச்சந்திரன்,கீதா லக்ஷ்மி என நடித்திருக்கும் அனைவரும் தங்கள் பங்களிப்பை நடிப்பில் சிறப்பாக செய்துள்ளனர் .
அருணின் இசையும் ,மோசஸ் டேனியலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
பல ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நாயாடிசமூகத்தை பற்றிய கதையை மையமாக வைத்து சில காட்சிகளில் குறை இருந்தாலும் மிரட்டும் திகில் கலந்த திரைக்கதையுடன் படத்தை தயாரித்து இயக்கியுள்ள ஆதர்ஷ் மதிகாந்தமத்தின் முயற்சியை பாராட்டலாம் !
ரேட்டிங் ; 2.5 / 5
Comments