ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் தங்கையான கஸ்தூரி காதலித்து வீட்டை விட்டு காதலனுடன் ஒடி போனதால் அவருக்கு காதல் என்றாலே பிடிக்காது.
இப் பிரச்சனையால் தன் மகள் சரண்யா காதலித்து திருமணம் செய்யாமல் தான் பார்க்கும் இளைஞனைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்.
ஆனால், ஜோசியக்காரர் மனோபாலா, உங்களது பெண்ணிற்கு நிச்சயம் காதல் திருமணம் தான் நடக்கும் என்று கூறுகிறார்.
இந்நேரத்தில் காதலிக்கும் காதலர்களுக்கு எதிராக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார்.
தனது ஊரில் யார் காதலித்தாலும் அவர்களை பிரிக்கும் வேலையை மறைமுகமாக மொட்டை ராஜேந்திரன் செய்து வருகிறார்.
அந்த ஊருக்கு வரும் நாயகன் கிருஷ்ணாவை நாயகிகள் கிருத்திகா சிங் மற்றும் அனுஷா தவான் காதலிக்கிறார்கள்.
ஆனால், அவர்களுடைய காதலை கிருஷ்ணா ஏற்க மறுக்கிறார்.
இதற்கிடையே இசை கல்லூரியில் ஒன்றாக படிக்கும் கிருஷ்ணாவும் சரண்யாவும் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள்.
சண்டை காதலாக மாறி காதலர்களாக இருக்கும் கிருஷ்ணாவும் சரண்யாவும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர் .
கிருஷ்ணா தன் மகள் சரண்யாவை காதலிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய ஆனந்தராஜ் கிருஷ்ணாவை தேடி அலைகிறார்.
முடிவில் கொலை செய்ய முயலும் ஆனந்தராஜிடம் இருந்து கிருஷ்ணா தப்பித்தாரா?
கிருஷ்ணாவும் சரண்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் -மனைவி என ஆனந்தராஜிக்கு தெரிந்ததா ? என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லும் படம்தான் ‘ராயர் பரம்பரை’
நாயகனாக நடிக்கும் கிருஷ்ணா துறு துறு இளைஞனாக காதல் காட்சிகளிலும் காமெடி காட்சிகளிலும் ரசிக்கும் படியான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .. நாயகியாக வரும் சரண்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் கதைக்கேற்றபடி நடிக்கிறார் .
இவர்களுடன் ராயராக நடிக்கும் ஆனந்த்ராஜ், கே ஆர் விஜயா , மொட்டை ராஜேந்திரன், கிருத்திகா சிங், அனுஷா தவான், மனோபாலா, RNR மனோகர், பவர் ஸ்டார் சீனிவாசன், கஸ்தூரி, படத்தின் தயாரிப்பாளர் சின்னசாமி மௌனகுரு, பழைய ஜோக் தங்கதுரை, கல்லூரி வினோத், பாவா லக்ஷ்மணன், சேஷு என நடித்த நடிகர்கள் அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் .
கணேஷ் ராகவேந்திரா இசையும் , விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
படம் பார்க்கும் ரசிக மக்கள் சிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நகைக்சுவை கலந்த காதல் கதையை அழுத்தமில்லாத கதையாக இருந்தாலும் ராக்கெட் வேகத்தில் பறக்கும் திரைக்கதையுடன் க்ளைமாஸ்க்கில் கிருஷ்ணாவின் தந்தை சீமான் செங்கல்வராயன் யார்? என்பதை சொல்லும் காட்சியில் தியேட்டரே அதிரும்படியான சிரிப்பலையில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து மகிழும் காமெடி கலாட்டாவாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்நாத்.
ரேட்டிங் : 3 / 5
Comments