சுயமாக தொழில் தொடங்குவதற்காக ஆதி ரூபாய் 25 லட்சம் பணத்தை ஒருவரிடம் வாங்குகிறார்.
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பணத்தை கொடுத்தவர் கடனை கொடு இல்லை என்றால் உன் தங்கச்சியை எனக்கு திருமணம் செய்து வை என நிர்பந்தம் செய்ய இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ஆதி கடனை திரும்ப செலுத்துவதற்காக சென்னையில் உள்ள யோகி பாபுவை பார்த்து பணத்தை திரட்ட சென்னைக்கு செல்கிறார் .
ஆனால் சென்னையில் யோகி பாபு முனிஷ் காந்த் தலைமையில் திருட்டு தொழில் செய்யும் நபர்களை வைத்து கொண்டு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் . பணத்திற்காக ஆதியும் யோகி பாபுவுடன் சேர்ந்து கடத்தல் தொழில் செய்கிறார்.
இந்நிலையில் விஞ்ஞானியான பாண்டியராஜனிடம் இருந்து அவரின் கண்டுபிடிப்பை திருடுவதற்காக ஜான் விஜய் சென்னை வருகிறார். பாண்டியராஜனிடம் உள்ள பொருளை திருடி எடுத்து தர முனிஷ் காந்திடம் ஜான் விஜய் பொறுப்பை ஒப்படைக்க,,,, அவர் மறுக்கும் நிலையில்,, யோகிபாபு முனிஷ் காந்துக்கு தெரியாமல் ஜான் விஜய்யிடம் பொருளை திருடி தருவதாக பேரம் பேசி ரூபாய் 50 லட்சம் வாங்கி விடுகிறார் .
வரும் வழியில் அரசியல்வாதியான ரவி மரியாவிடம் போலீஸ்க்கு பயந்து 50 லட்ச பணத்தை நான் வந்து கேட்டால் மட்டும்
இந்த பணத்தை தர வேண்டும் வேறு யார் கேட்டாலும் தர கூடாது என உத்தரவு போட்டு அவரிடம் கொடுக்கிறார் யோகிபாபு.
பாண்டியராஜனிடம் உள்ள பொருளை திருட யோகி பாபுவுடன் ஆதியும் இணைந்து கொள்கிறார் . இருவரும் சேர்ந்து பாண்டியராஜனின் ஆய்வகத்தில் பொருளை திருட முயற்சிக்கும்போது பாண்டியராஜனுடன் ஏற்படும் தள்ளு முள்ளில் ஆதியின் தவறான நடவடிக்கையால் யோகிபாபு ஒரு சேரில் உட்கார,,, தானாக கை விலங்கு போடப்பட்டு ஒரு ஊசி செலுத்தப்படுவதால் ஹன்சிகா போன்று பெண்ணாக மாறிவிடுகிறார் யோகிபாபு.
முடிவில் ஹன்சிகா உருவம் கொண்ட பெண் உடலான யோகிபாபு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்தாரா ?
விஞ்ஞானியான பாண்டியராஜனிடம் இருந்து அவரின் கண்டுபிடிப்பை ஜான் விஜய் திருடுவதற்கான காரணம் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'பாட்னர்'
கதையின் நாயகனாக ஆதி கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் பாலக் லால்வானி அமைதியான அழகில் இயல்பான நடிப்பில் நடிக்கிறார் !
ஜான் விஜய், ரோபோ சங்கர், தங்கதுரை, பாண்டியராஜன், முனிஷ்காந்த், அகஸ்டின் என அனைவரும் காமெடி தர்பாரே நடத்துகிறார்கள் .
குறிப்பாக ரவிமரியா காம பெண் பித்தராக படம் பார்க்கும் ரசிகர்களை சூடேற்றுமளவில் அவர் செய்யும் அலப்பறையில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது !
சந்தோஷ் தயாநிதியின் இசையும், ஒளிப்பதிவாளர் சபீர் அஹமத் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
முழுக்க காமெடி கலந்த கதையுடன் ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் திறமையான நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் ஒரு ஜாலியான காமெடி படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மனோஜ் தாமோதரன்.
ரேட்டிங் ; 3 / 5
Comentarios