top of page
mediatalks001

' ரங்கோலி ' - விமர்சனம் !


சலவை தொழிலாளி முருகதாஸின் மகனான ஹமரேஷ் கார்ப்பரேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.


ஹமரேஷ் படிக்கும் பள்ளியில் மாணவர்களுடன் அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவதால் சேர்க்கை சரியில்லாத காரணத்தினால் தனியார் பள்ளியில் படிக்க வைத்தால் மகன் குணம் மாறிவிடும் என்று எண்ணி தந்தை முருகதாஸ் அவரை அதிகம் செலவு செய்து சி.பி.எஸ்.சி. பள்ளியில் சேர்க்கிறார். கார்ப்பரேஷன் பள்ளியில் நன்றாக படித்த ஹமரேஷ்க்கு சி.பி.எஸ்.சி பாடம் கடினமாக இருக்கிறது. அங்குள்ள மாணவர்களோ கார்ப்பரேஷன் பள்ளியில் படித்ததால் ஹமரேஷை லோக்கல் இடத்தில் இருந்து வந்தவன் என்று கேலி செய்து அவனிடம் பழக மறுக்கின்றனர்.


இதற்கிடையில் மாணவன் ஹமரேஷ் நாயகி பிரார்த்தனா பிரதீப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்து கொண்ட பிரார்த்தனா பிரதீப்பை ஒரு தலையாய் காதலிக்கும் சக மாணவர்களில் ஒருவன் ஹமரேஷ் மீது இருக்கும் கோபத்தால் பள்ளி பாத்ரூமில் ஹமரேஷும் பிரார்த்தனா பிரதீப்பும் காதலிப்பதாக எழுதி வைத்துவிடுகிறான்.


இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்க,,,,, இதனால் முருகதாஸை வரவழைத்து பள்ளியில் இருந்து மாணவன் ஹமரேஷை நீக்கும் அளவிற்கு நிர்வாகம் சென்றுவிடுகிறது.


முடிவில் தொடர்ந்து ஹமரேஷ் அதே பள்ளியில் படித்தாரா ? இப் பிரச்சினையால் பள்ளி நிர்வாகம் பள்ளியிருந்து ஹமரேஷை நீக்கியதா ?


பள்ளி பாத்ரூமில் ஹமரேஷும் பிரார்த்தனா பிரதீப்பும் காதலிப்பதாக எழுதி வைத்த மாணவன் யார் ? என்பதை சொல்லும் படம்தான் 'ரங்கோலி '


கதையின் நாயகனான இயக்குனர் விஜய் ,,,நடிகர் உதயா,,,, இவர்களது சகோதரி மகனான ஹமரேஷ் பள்ளி மாணவனாக தேர்ந்த நடிகரை போல நடுத்தர குடும்பத்தில் வாழும் பையனாக உணர்வுபூர்வமான நடிப்பில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நாயகனின் தந்தையாக குணசித்திரமாய் நடிக்கும் முருகதாஸ், இளம் வயதில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பில் அசத்தும் சாய்ஸ்ரீ பிரபாகரன், நாயகியாக நடிக்கும் பிரார்த்தனா பிரதீப் ,அக்காவாக வரும் அக்க்ஷயா, மாஸ்டராக நடிக்கும் அமித் பார்கவ் என இயல்பான நடிப்பில் அனைவரும் நடித்துள்ளனர் .


கே.எஸ். சுந்தர மூர்த்தி இசையும் , மருதநாயகத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


கல்வி செலவை பற்றி கவலைப்படாமல் தன் மகன் தனியார் பள்ளியில் படித்தால் ஒழுக்கமாகி நன்றாக படிப்பான் என நினைக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் இந்த கதையை மையமாக கொண்டு திரைக்கதை விறு விறுப்பாக நகர்ந்தாலும் ,,, படம் முழுவதும் ஒரே மாதிரியான காட்சிகளினால் தொய்வு ஏற்படுகிறது . மற்றபடி மென்மையான பள்ளி பருவ காதலுடன்,,, மகனை படிக்க வைக்க பெற்றோர் படும் போராட்டத்தை விளக்கும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வாலி மோகன்தாஸ்.


ரேட்டிங் ; 3 / 5


Comments


bottom of page