கதையின் நாயகன் அமிதாஸின் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில்அனுமதிக்கப்படுவதால் அவரை காப்பாற்ற அமிதாஸிற்கு பல லட்சங்கள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் பணத்திற்காக சிலை கடத்தல்காரர் வீட்டில் இருக்கும் ஐம்பொன் சிலை ஒன்றை திருட முயற்சிக்கிறார் அமிதாஸ் .
அதே நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வீட்டிலும் அவர் திருட முயற்சித்து, அவரிடம் வகையாக மாட்டிக்கொள்கிறார் .
பணத்தாசை கொண்ட கிரிமினல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் அமிதாஸ் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து, அவர் மூலமாக சிலையை கைப்பற்றி அதை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்.
தங்கையின் மருத்துவ செலவுக்காக சரத்குமாருடன் சேர்ந்து சிலையை விற்பனை செய்ய அமிதாஸும் உடன் இருக்கிறார் ..
இருவரும் இணைந்து 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கைப்பற்றி விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள்.
அதே சமயம், சிலையை கோடிக்கணக்கில் விற்பனை செய்தவுடன் அமிதாஸை ஏமாற்றி மொத்த பணத்தையும் சுருட்ட சரத்குமார் திட்டம் போடுகிறார்
சிலையை கை மாற்றி விடும் நேரத்தில் கேட்ட தொகையினை சிலையை வாங்குபவர்கள் தர மறுப்பதால் ,,சிலையை விற்க முடியாமல் திரும்பும்போது வரும் வழியில் எதிர்பாராத விதமாக ஒரு சண்டையில் சிலை உடைந்து போகிறது.
சரத்குமார் - அமிதாஸ் இருவரும் உடைந்த சிலையை போல வேறு சிலை செய்ய முயற்சி செய்கின்றனர் .
முடிவில் இருவரும் புதிய சிலையை சாமார்த்தியமாக சிலை கடத்தும் கும்பலிடம் விற்றார்களா?
கோடிக்கணக்கில் விற்பனை செய்தவுடன் அமிதாஸுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சரத்குமார் கொடுத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘பரம்பொருள்’.
நாயகனாக நடித்திருக்கும் அமிதாஸ் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .
காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சரத்குமார் வழக்கமான பாணியில் நடித்துள்ளார் .
அமைதியான அழகில் நாயகியாக நடிக்கும் காஷ்மீரா பர்தேசி.
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல்
சிலை கடத்தம் நபர்களாக நடிக்கும் வின்சென்ட் அசோகன் , பாலகிருஷ்ணன்
அமிதாஸின் தங்கையாக நடிக்கும் ஸ்வாதிகா, சார்லஸ் வினோத், கஜராஜா , செந்தில் குமரன் என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
யுவன் சங்கர் ராஜா இசையும்,, பாண்டி குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
சிலை கடத்தலை மையமாக கொண்ட கதையுடன் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத கிளைமாஸ்க்குடன் ஆக்க்ஷன் கலந்த பர பரப்பான படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் அரவிந்த் ராஜ்.
ரேட்டிங் ; 3 / 5
Comments