ஓய்வுபெற்ற நீதிபதியான பாரதிராஜா மகனான,,, கெளதம் மேனனுடன் வாழ்ந்து வருகிறார் மேலும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
கிரிமினல் வழக்கறிஞராக இருக்கும் கெளதம் மேனன் பணத்திற்காக எல்லா வழக்குகளையும் எடுத்து நடத்துகிறார்.
இதில் பிரமிட் நடராஜனின் குற்ற வழக்கை கெளதம் மேனன் எடுத்து நடத்துவது பாரதிராஜாவுக்கு பிடிக்காமல் போக இருவரும் பத்து வருடங்களாக ஒரே வீட்டில் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
இப்படி போய்கொண்டிருக்கும் போது பாரதிராஜாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாட அவரது பிள்ளைகள் நினைக்கின்றனர்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் வரமுடியாத காரணத்தால் விழாவிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் கெளதம் மேனன் பார்க்கிறார்.
விழா நடைபெறும் நாளில் கெளதம் மேனன் பிரமிட் நடராஜனின் வழக்கு விஷயமாக வெளியூர் செல்கிறார்.
இதனால் பாரதிராஜா மூன்று பிள்ளைகள் இருந்தும் விழாவிற்கு தன்னுடன் யாரும் இல்லையே என்று மனமுடைந்து போகிறார்.
அதன் பின் பாரதிராஜாவிற்கு ஒரு கடிதம் கிடைக்கிறது . அந்த கடிதத்தில் தான் காதலித்து கை விட்ட தன்னால் ஒரு குழந்தைக்கு தாயான முன்னாள் காதலியின் பதிவுகள் அதில் இருக்கிறது.
கடிதத்தை படித்தவுடன் கலங்கி போகும் பாரதிராஜா பழைய நினைவுகளில் மூழ்கி முன்னாள் காதலியை தேடி யாருக்கும் சொல்லாமல்
வீட்டை விட்டு சென்றார்.
மற்றொரு பக்கம் பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை செய்யும் யோகி பாபு காப்பகத்தில் படிக்கும் பெறாத பிள்ளையை தேடி செல்கிறார்.
முன்னாள் காதலியை தேடி செல்லும் பாரதிராஜாவும் , யோகி பாபுவும் பேருந்து பயணத்தின் போது சந்தித்துக் கொள்வதோடு, இருவரும் சேர்ந்தே பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது .
முடிவில் தன் காதலியை தேடி சென்ற பாரதிராஜா அவரை கண்டுபிடித்து அவரிடம் மன்னிப்பு கோரினாரா ?
எதற்காக தான் பெறாத பிள்ளையை தேடி யோகி பாபு காப்பகத்துக்கு செல்கிறார் என்பதை சொல்லும் படம்தான் 'கருமேகங்கள் கலைகின்றன'
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரதிராஜா ஓராயிரம் உணர்வுகளை பல பரிணாமங்களில் அன்புக்காக ஏங்குவது, செய்த குற்றத்துக்காக குற்ற உணர்வில் பரிதவிப்பது என உணர்வுபூர்வமான நடிப்பில் ரசிகர்களின் மனதை கலங்க வைக்கிறார் .
நடிப்பில் எந்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தாத வழக்கமான பாணியில் நடிக்கும் கெளதம் மேனன்.
குணசித்திர கதாபாத்திரத்தில் யோகிபாபு , அதிதி பாலன், டெல்லி கணேஷ் ,மஹானா, குழந்தை நட்சத்திரம் சாரல், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ஜி.வி.பிரகாஷின் இசையும் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
குடும்ப உணர்வுகளை கொண்ட கதையினை மையமாக வைத்து நேர்த்தியான திரைக்கதையாக இருந்தாலும் படத்தின் பலவீனமாக சில காட்சிகளின் தொய்வினால் கதையின் அழுத்தம் குறைகிறது .பாரதிராஜா ,யோகிபாபு என நடிப்பின் ஆளுமைகளால் மனித உணர்வுகள் பற்றி ரசிகர்கள் நினைக்கும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.
ரேட்டிங் ; 3 / 5
Comments