top of page
mediatalks001

'கிக்' - விமர்சனம் !


ஒய் ஜி மஹேந்திரா தன் மகனான தம்பிராமையாவை நம்பாமல் தான் நடத்தி வரும் விளம்பர கம்பெனியின் முழு பொறுப்பையும் சந்தானத்திடம் ஒப்படைக்கிறார் .


தம்பிராமையா தலைமையில் சந்தானம் விளம்பர கம்பெனியை நடத்தி வருகிறார் .

மற்றொரு பக்கம் மனோபாலா நடத்தி வரும் விளம்பர கம்பெனியில் கோவை சரளாவுடன் தான்யா ஹோப் வேலை பார்த்து வருகிறார்.


இவர்களுக்குள் விளம்பரம் பிடிப்பதில் போட்டி ஏற்படுகிறது. ஒரு கார் விளம்பரத்திற்காக சந்தானம் பெண்களை வைத்து கார் விளம்பரத்தின் மேலாளர் செந்திலை மயக்கி விளம்பரம் பிடிக்கிறார்.


இந் நேரத்தில் இல்லாத பொருளுக்கு ஒரு நடிகையை வைத்து படம் எடுக்க ,, தம்பி ராமையா சந்தானத்தை கேட்காமல் அந்த விளம்பர படத்தை

அனைத்து சேனல்களுக்கு கொடுத்து விடுகிறார் .


இதனால் கோப்படும் தான்யா ஹோப், சந்தானத்தின் மேல் கவுன்சிலில் புகார் கொடுக்கிறார்.


கவுன்சிலின் புகாரில் இருந்து தப்பிக்க வயாகரா போன்ற அப் பொருளை உருவாக்க தாய்லாந்தில் இருக்கும் விஞ்ஞானி பிரம்மானந்ததின் உதவியை நாடுகிறார்.


இந் நிலையில் தாய்லாந்தில் தான்யாவை நேரில் பார்க்கும் சந்தானம் அவர் மீது காதல் வயப்படுகிறார். தான்யாவிடம் வேறொரு பெயரில் பழகி, தன்னுடன் காதல் வயப்பட வைக்கிறார் சந்தானம்.


தான்யாவை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கும் சந்தானம், ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிவிட முயற்சிக்கும் நேரத்தில், தான் ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார் தான்யா ஹோப்.


முடிவில் காதலர்களான சந்தானமும் ,தான்யா ஹோப்பும் ஒன்றாக இணைந்தார்களா? கவுன்சிலின் புகாரில் இருந்து சந்தானம் தப்பித்தாரா ?இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் 'கிக்'


நாயகனாக நடிக்கும் சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடியில் அவரது பாணியில் அசத்துகிறார் ,


நாயகியாக நடிக்கும் தான்யா ஹோப் இளசுகளை ஏங்க வைக்கும் அழகில் சிறப்பான நடிப்பில் ஜொலிக்கிறார் .


முழு படத்தையும் தோளில் சுமந்து கதையினை காப்பாற்ற போராடுகிறார்கள் தம்பி ராமையாவும், கோவை சரளாவும்.

இவர்களுடன் செந்தில் ,மனோபாலா, மன்சூர் அலிகான், கிங் காங் , முத்துக்காளை , சைதை சேது என அனைவரது நடிப்பும் கதைக்கேற்றபடி இருக்கிறது .


அர்ஜுன் ஜான்யா இசையும் , சுதாகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்கள் சிரிக்க வேண்டும் ஒரே நோக்கத்துடன் எந்த லாஜிக்கும் பார்க்காமல் இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் ராஜ்.


ரேட்டிங் ; 2.5 / 5


போதை குறைவான 'கிக் '

Commentaires


bottom of page