வெளிநாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக அனுஷ்கா இருக்கிறார். திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கும் அனுஷ்காவிற்கு திருமணம் செய்து அழகு பார்க்க தாய் ஜெயசுதா ஆசைப்படுகிறார்.
இந் நேரத்தில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு அனுஷ்கா தன் தாயுடன் வருகிறார். வந்த இடத்தில் தாய் ஜெயசுதா இறந்து விடுகிறார்.
ஆதரவற்ற நிலையில் இருக்கும் அனுஷ்கா, திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்று தாயாக வேண்டும் என ஆசைப்படுகிறார்.
இதற்கான முயற்சியில் இறங்கும் அனுஷ்கா விந்து தானம் அளிப்பவர்களில் அனைத்திலும் திறமையாக இருக்கும் ஒருவரை தேடுகிறார்.
இந்நிலையில், நகைச்சுவையாக மேடையில் நின்று கொண்டு பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும் நாயகன் நவீன் பொலிஷெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கிறார் அனுஷ்கா.
இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்ள ஒரு கட்டத்தில் தன் காதலை அனுஷ்காவிடம் வெளிப்படுத்துகிறார் நவீன் பொலிஷெட்டி.
முடிவில் எதையும் விரும்பாமல் விந்து தானம் பெற்று ஒரு குழந்தைக்கு தாயாக நினைக்கும் அனுஷ்கா நவீன் பொலிஷெட்டியின் காதலை ஏற்று கொண்டாரா ? அனுஷ்காவின் விருப்பப்படி நவீன் பொலிஷெட்டி விந்து தானம் கொடுத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி'
கதையின் நாயகியாக நடிக்கும் அனுஷ்கா அமைதியான அழகில் ஆர்பாட்டமில்லாத நடிப்பில் உணர்ச்சிமயமான காட்சிகளில் இயல்பான நடிப்பில் ஜொலிக்கிறார் !
கதையின் நாயகனாக நடித்க்கும் நவீன் பொலிஷெட்டி இளமை துள்ளலுடன் துறுதுறு நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
கதையின் வேகத்திற்கு இணையாக ரதன் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் .
கலர்புல்லான ஒளிப்பதிவில் நீரவ் ஷா ஒளிப்பதிவு.
இதுவரை திரையில் வராத கதையாக விந்து தானம் பெற்று ஒரு குழந்தைக்கு தாயாக நினைக்கும் நாயகியின் கதைக்களத்துடன் ,,நேர்த்தியான காமெடி கலந்த திரைக்கதை அமைப்பில் தரமான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மகேஷ் பாபு.
ரேட்டிங் ; 3.5 / 5
புதுமையான கதைக்களத்தில் ரசிக்கும்படியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி'
Comments