ஹரிஷ் உத்தமன் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக
வேலை செய்து வருகிறார்.
ஒருசனிக்கிழமை இரவு மனைவி ஷீலா ராஜ்குமார் ,மகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் மொட்டை மாடியில் ஒன்றாக அமர்ந்து சத்தம் போட்டு ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சத்தத்தை கேட்டு எரிச்சலடையும் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஒருவர் போலீசுக்கு புகார் தருகிறார்.
புகாரின் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் “அருவி” மதன் குமார் அங்கு வந்துவிசாரிக்க, விசாரணையின்போது வாக்கு வாதமாக மாறி தள்ளு முள்ளு ஆகும் நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன்குமார் , ஏட்டு சோபன் மில்லருடன் கோபத்துடன் அங்கிருந்து செல்கிறார்
ஹரிஷ் உத்தமனும் ,ஷீலா ராஜ்குமாரும் சேர்ந்து தர குறைவாக “அருவி” மதன் குமாரை பேசுவதால் ஹரிஷ் உத்தமனை பழிவாங்க துடிக்கிறார் “அருவி” மதன் குமார் .
இப் பிரச்சனை நடந்த மறுநாள் காலை ஷீலா ராஜ்குமார் தன் மகள் கையில் இருந்த மொபைல் போன் திருட வந்தவரை சட்டை பிடித்து இழுக்க கீழே விழுந்து இறந்து போகிறார்.
இந் நேரத்தில் ஹரிஷ் உத்தமன் ஷீலா ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொள்வதால் தொடர்பில்லாமல் இருக்கும் ஷீலா ராஜ்குமாரின் பெற்றோர் சில வருடங்களுக்கு பின் வீட்டிற்க்கு வருவதால் பதட்டம் நிலவுகிறது.
வீட்டின் உள் அறையில் ஒருவர் இறந்து கிடக்க ,, அச் சமயத்தில் ஹரிஷ் உத்தமன் மீது ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் அவரை விசாரித்து அழைத்து செல்ல வீட்டின் கதவை தட்டுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் “அருவி” மதன் குமார்.
முடிவில் ஹரிஷ் உத்தமனை விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் “அருவி” மதன் குமார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றாரா ? மொபைல் போனை திருட வந்து வீட்டின் உள்ளே வந்து இறந்து போன நபரின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'நூடுல்ஸ்'
நாயகனாக நடிக்கும் ஹரிஷ் உத்தமன் உணர்வுபூர்வமான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் . இயல்பான நடிப்பில் ஷீலா ராஜ்குமார். போலீஸ் அதிகாரியாக வரும் நடிகரும் இயக்குனருமான “அருவி” மதன் குமார் எதார்த்த நடிப்பில் அசத்துகிறார் !வழக்கறிஞராக நடிக்கும் வசந்த் மாரிமுத்து உடல் மொழியில் பயத்தின் கொடூரத்தை நடிப்பினால் வெளிப்படுத்தும்போது ரசிக்க வைக்கிறார் .
வினோத் ராஜாவின் ஒளிப்பதிவும் . ராபர்ட் சற்குணத்தின் இசையும் படத்திற்கு பக்க பலம் !
ஒரு வீட்டில் ஒரு இரவில் ஆரம்பித்து மறுநாள் வரை நடக்கும் கதையை வைத்து விறு விறுப்பான பதட்டமான சூழ்நிலை கலந்த அழுத்தமான திரைக்கதையுடன் ,,, க்ளைமாக்ஸை படம் பார்க்கும் ரசிகர்களே எதிர்பார்க்குமளவில் திறமையாக பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் “அருவி” மதன் குமார் .
ரேட்டிங் ; 3.5 / 5
'நூடுல்ஸ்' - அறுசுவை விருந்து !
Comments