சென்னையில் நாயகன் வெற்றி வசித்து வருகிறார். அவரது நண்பனான விஸ்வநாத் வெளி மாநிலத்துக்கு வேலைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்லி வேலைக்கு செல்லும் இடத்தில் காணாமல் போகிறார்.
இந்நேரத்தில் விஸ்வநாத்தின் அப்பாவிற்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் சந்தேகத்தில் நண்பனை தேடி ஆந்திர மாநிலம் செல்கிறார் வெற்றி . அங்கு நண்பனை தேடும்போது வெற்றியை கொல்ல ஒரு மர்ம கும்பல் முயற்சி செய்கிறது .
இச் சூழ்நிலையில் வெற்றியை செம்மரம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று நினைத்து போலீஸ் கைது செய்து தனி இடத்தில் அடைத்து வைத்து அடி பின்னி எடுக்கிறது போலீஸ் .
அந்த இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இருக்க, அவர்கள் வறுமை காரணமாக தோட்ட வேலைக்காக ஆந்திரா வந்து செம்மரக்கடத்தலில் சிக்கிக்கொண்டதை வெற்றி அறிந்துக் கொள்கிறார்.
இதற்கிடையில் வெற்றி உள்ளிட்ட தமிழர்களை சுட்டு கொல்ல உத்தரவிடுகிறான் ஆந்திர போலீஸ் உயர் அதிகாரி.
முடிவில் அந்த கொலை தாக்குதலில் இருந்து வெற்றி தப்பித்து தனது நண்பனை கண்டுபிடித்தாரா?, இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’ரெட் சாண்டல் வுட்’
நாயகனாக நடிக்கும் வெற்றி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடியாக இருக்கிறார் . அந்த வகையில் இப் படத்தின் கதையுடன் இணைந்து உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அனுபவ நடிப்பினால் விவசாயிகளின் வறுமையை கண்கலங்க வைக்கும் நடிப்பில் அசத்துகிறார் .
நாயகியாக நடிக்கும் தியா மயூரி ,மிரட்டும் வில்லனாக நடிக்கும் கே.ஜி.எப் ராம், மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராமன், இளவரசு, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், சார்லஸ் வினோத் என படத்தில் நடிக்கும் அனைவருமே நடிப்பில் வாழ்கின்றனர்
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும் , சாம் சி.எஸ் இசையும் படத்திற்கு பக்க பலம் !
2015-ல் செம்மரம் வெட்ட போனதாகச் சொல்லி திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையோடு ஆரம்பத்தில் செம்மரத்தின் மகத்துவத்தையும் , அதன் இயற்கை மருத்துவ குணத்தை அழகாக விளக்குவதுடன்,,, செம்மரக்கடத்தல் பின்னணியில் இருக்கும் அரசியல் வியாபாரத்தில் , வறுமையில் அவதிப்படும் அப்பாவி தமிழர்கள் பலியாவதை தத்ரூபமான காட்சியமைப்புடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் குரு ராமானுஜம்.
ரேட்டிங் ; 3 / 5
Comentarios