top of page
mediatalks001

‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ - பட விமர்சனம் ! தமிழ் திரையுலகில் பாராட்ட தோன்றும் புதிய முயற்சி !


இஸ்லாமிய குடும்பத்தில் வாழும் நிரஞ்சனா நெய்தியாரும், ஆவணப்பட பெண் இயக்குநரான நகரத்தில் வாழும் ஸ்ருதி பெரியசாமியும் சில நாட்கள் ஒரே வீட்டில் தங்கும் போது, இவர்களிடையே தன் பாலின காதல் உருவாகிறது.


இதை தெரிந்துக் கொண்ட நிரஞ்சனா நெய்தியாரின் தந்தை நிரஞ்சனாவுக்கும் அர்ஷத்திக்கும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.


சிறுவயதிலிருந்து தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்அர்ஷத்.


இந்நிலையில் திருமணத்திற்கு முந்தையை நாள் நிரஞ்சனா நெய்தியார் அர்ஷத்தை தனியாக அழைத்து தான் ஸ்ருதி பெரியசாமி என்ற பெண்ணை விரும்புவதாக சொல்லி அர்ஷத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.


அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சர்ச்சையாக சொல்லாமல் தன் பாலின மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் படைப்பாக மக்களிடம் வலியுறுத்தும் படம் தான் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’.


முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் -ஸ்ருதி பெரியசாமி என இருவரும் தங்களுக்கு உள்ள காதலான உறவில் கதாபாத்திரத்துடன் இணைந்து உணர்வுபூர்வமான நடிப்பில் இயல்பான காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.

நேர்த்தியான நடிப்பில் நாயகனாக வரும் அர்ஷத்.


இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் இசையும் ,ஒளிப்பதிவாளர் சதீஷ் கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


தன் பாலின சேர்க்கையாளர்களின் உணர்வை மதித்து ,,, தன் பாலின பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல ஓரினச்சேர்க்கை என்பது தவறானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தாலும் இது போன்ற உறவுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்கிற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.


ரேட்டிங் ; 3 / 5


‘ வாழ்வு தொடங்குமிடம் நீ தானே ’ தமிழ் திரையுலகில் பாராட்ட தோன்றும் புதிய முயற்சி !






Comments


bottom of page