top of page
mediatalks001

' சித்தா ' - பட விமர்சனம்!!



"Chithha"

WRITTEN AND DIRECTED BY – S. U. ARUN KUMAR

TITLE SONG - SANTHOSH NARAYANAN

SONGS - DHIBU NINAN THOMAS

ORIGINAL SCORE – VISHAL CHANDRASEKHAR

DOP - BALAJI SUBRAMANYAM

EDITOR - SURESH A PRASAD

ART DIRECTOR - C. S. BALACHANDAR

LYRICS - VIVEK, YUGABHARATHI & S.U.ARUN KUMAR

SOUND DESIGNER - VINOD THANIGASALAM

STUNT - DANGER MANI

PRODUCED BY- Etaki Entertainment SIDDHARTH


பழனியில் சுகாதார அலுவலக அதிகாரியாக வேலை செய்து கொண்டு இறந்து போன அண்ணன் மகள் சஹஷ்ரா ஶ்ரீயை தன் மகளை போல சித்தார்த் பாசமாக வளர்க்கிறார்.


தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வதிலிருந்து சஹஷ்ரா ஶ்ரீக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் அப்பா இல்லை என்ற ஏக்கம் ஏற்படாத வகையில் சஹஷ்ரா ஶ்ரீயை பாசமாகவும், பாதுகாப்பாகவும் வளர்க்கும் சித்தார்த், ஒரு கட்டத்தில் பள்ளி பருவ காதலி நிமிஷா சஜயனை காதலிக்கிறார்.


குழந்தைகளிடம் அன்போடு இருக்கும் சித்தார்த் தன் நண்பனின் அண்ணன் மகள் ஆபியா தஸ்னீமிடம் பாசத்தோடு பழகுகிறார்.


இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன் யாருக்கும் தெரியாமல் மானை பார்க்கும் ஆர்வத்தில்ஆபியா தஸ்னீம் அய்யனார் மலைக்கு தனியாக செல்ல ,,,,,, சிறுமியான ஆபியா தஸ்னீமை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து விட, அந்த பழி சித்தார்த் மீது விழுகிறது.


போலீஸ் நிலையத்திலும், தன் நண்பனின் வீட்டிலும் அவமானப்படும் சித்தார்த் ஆபியா தஸ்னீமின் வாக்கு மூலத்தில் நிரபராதி என மீண்டு வருகிறார்.


இக்கட்டான இந்த சமயத்தில் திடீரென சஹஷ்ரா ஶ்ரீ காணாமல் போய்விடுகிறார்.


ஒரு பக்கம் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் தேட, மறுபக்கம் போலீஸார் தேடுகிறார்கள். அப்படி இருந்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்நேரத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டுபிடிக்கப்படுகிறார்.


அந்த சடலம் சித்தார்த்தின் மகள் அல்ல என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது.


முடிவில் காணாமல் போன சித்தார்த்தின் மகளை கடத்திய மர்ம நபர் யார் ?


சித்தார்த் மகளான சஹஷ்ரா ஸ்ரீக்கு நடந்த கொடுமை என்ன ?


போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சஹஷ்ரா ஸ்ரீயை கடத்திய குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்தார்களா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் 'சித்தா'



கதையின் நாயகனாக சித்தார்த் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் தன் மீது பழி விழுந்ததும் என்ன நடந்தது என்று தெரியாமல் தடுமாறும் காட்சிகளிலும் , மகள் காணாமல் போனதால் நிலைகுலைந்து மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவர்களை கொல்ல துடிக்கும் காட்சிகளிலும் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரமாக பாசம் கலந்த உணர்வுப்பூர்வமான நடிப்பில் படம் முழுவதும் வாழ்கிறார் .


சித்தார்த் மகளான சஹஷ்ரா ஸ்ரீ சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைக்குமளவில் நடிப்பில் சிறப்பு !


சித்தார்த்தின் காதலியாக நடிக்கும் நிமிஷா சஜயன் இயல்பாக நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


இயல்பான நடிப்பில் நடித்துள்ள போலீஸ் நண்பனாக பாலாஜி, அஞ்சலி நாயர், போலீஸ் பெண் உயர்அதிகாரி, சித்தார்த்தின் நண்பர்கள் என புதுமுகங்களாக இருந்தாலும் தேர்ந்த நடிகர்களை போல நடித்திருப்பது படத்திற்கு சிறப்பு.


அமைதியான நடிப்பில் சைக்கோ வில்லனாக வருபவர் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.


இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பாடல்கள் அனைத்தும் இனிமை .


விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கதைக்கு பக்க பலம்!


ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகளின் உணர்வினால் கதாபாத்திரங்களை கண் முன்னே நிறுத்துகிறார் .



சித்தப்பா - மகள் இடையிலான அன்பான உறவுடன் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையின் கதையை மையமாக கொண்டு,,, அழுத்தமான திரைக்கதையில் காட்சிகளோடு கதாபாத்திரங்களுடன் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவரையும் திறமையாக நடிக்க வைத்து படம் பார்க்கும் மக்களுக்கு பாலியல் வன்கொடுமையின் விழிப்புணர்வின் புரிதலை விளக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்.


ரேட்டிங் ; 3.5 / 5


‘சித்தா’ பெற்றோர்களுக்கான விழிப்புணர்வின் அடையாளம் !

Comments


bottom of page