போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவி மேலிடம் கண்டித்தாலும் எதையும் யோசிக்காமல் கொலை குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் என் கவுண்டரில் சுட்டு கொல்பவர் .
இந்நிலையில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக கழுத்தறுந்த நிலையில் கண்கள் தோண்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்படுகின்றனர்.
இந்த கொடூர கொலைகளை செய்யும் ஸ்மைலி சைக்கோ கில்லரை பிடிக்க ஜெயம் ரவியும் மற்றொரு அதிகாரியான நரேனும் மேலிடத்தால் நியமிக்கப்படுகின்றனர்.
ஒரு பக்கம் இளம் பெண்கள் கடத்தப்பட்டு கொலைகள் நடக்கிறது .மறு பக்கம் போலீசாரின் தீவிர தேடுதலில் சைக்கோ கில்லரை பிடிக்கும்போது அந்த கொலைகாரனால் நரேன் இறக்கிறார்.
நரேனின் இறப்பினால் மனஉளைச்சலடையும் ஜெயம் ரவி வேலையை விட்டு இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் .
இந்நேரத்தில் பிடிபட்ட சைக்கோ கில்லர் ஜெயிலிருந்து தப்பித்து விட, மீண்டும் தொடர் கொலைகள் நடைபெறுகிறது.
இச் சமயத்தில் டாக்டர் சார்லியின் மகளை கடத்துகிறான் ஸ்மைலி சைக்கோ கில்லர் . அதிர்ச்சியடைந்த ஜெயம் ரவி சார்லியின் மகளை உயிருடன் மீட்க ஸ்மைலி சைக்கோ கில்லர் இருக்கும் இடத்தை தேடி விரைகிறார் .
முடிவில் சார்லியின் மகளை ஸ்மைலி சைக்கோ கில்லரிடமிருந்து உயிருடன் ஜெயம் ரவி காப்பாற்றினாரா ?
போலீசாரின் தீவிர தேடுதலில் மீண்டும் பிடிபட்ட ஸ்மைலி சைக்கோ கில்லரை ஜெயம் ரவி என்ன செய்தார் ? என்பதை சொல்லும் படம்தான் 'இறைவன்'
போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி உணர்வுப் பூர்வமான நடிப்பில் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் !
நயன்தாரா அளவான நடிப்பில் அமைதியாக நடிக்கிறார் .
நரேன் ,விஜயலட்சுமி, ஆசிஷ் வித்யார்த்தி, சார்லி ,பக்ஸ் என நடித்த நடிகர்கள் நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஸ்மைலி சைக்கோ வில்லனாக மிரட்டும் ராகுல் போஸ் ஸ்டைலீஷாக அழகாக நடிக்கிறார் .
ஆனால் மற்றொரு சைக்கோ வில்லனாக வினோத் கிஷனின் மிகையான நடிப்பு எரிச்சலை வரவழைக்கிறது .
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் , ஹரி கே வேதாந்தத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !!
தொடர் கொலைகளை செய்யும் ஸ்மைலி சைக்கோ கொலையாளியை பிடிக்க மேலிடம் நியமிக்கும் போலீஸ் அதிகாரி எதிர்நோக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன் ,,,ஒரு காட்சியில் ஸ்மைலி சைக்கோ கொலையாளி,,, தான் செய்த கொலைகளை ரத்த வாடை கலந்த ரசனையுடன் விவரிக்கும்போது படம் பார்க்கும் ரசிக பெரு மக்கள் மனதளவில் பாதிக்கப்படுமளவில் அழுத்தமில்லாத ரத்த களரியான திரைக்கதை அமைப்புடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஐ.அகமது .
ரேட்டிங் ; 2 / 5
Comments