பணக்கார வர்க்கத்தை சேர்ந்த கைலாஷ், சிறுமி ப்ரணிதி, வேதாந்த் நண்பர்களான மூவரும் வசதிபடைத்தவர்கள். படிப்பதற்கு வழி இல்லாத ஏழையான பூவையாரும் இவர்களின் நண்பன்.
பள்ளிக்கு செல்லாமல் இவர்கள்வசிக்கும் அபார்ட்மெண்டில் வேலை பார்த்து வருகிறான் பூவையார் ..
கைலாஷின் பெற்றோர்களான வெங்கட் பிரபு – சிநேகா தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதால் எந்த நேரமும் அவர்கள் பணியில் பரபரப்பாக இருப்பதால் தனிமையை உணரும் கைலாஷிற்கு அவனது நண்பர்கள் ஒரு நாய்குட்டி ஒன்றை பரிசாக வழங்க..அதனை தன்னுடன் பழகுவதற்கும் விளையாடுவதற்கும் பாசமாக வளர்க்கிறார் கைலாஷ். .
சில நாட்களுக்கு பின் குட்டியாக இருந்த நாய் பெரிதாக வளர்ந்து விடுகிறது. ஒருநாள் அந்த நாய், அபார்ட்மெண்டை விட்டு வெளியே ஓடி விடுகிறது. நாய் தொலைந்து போனதால் நண்பர்கள் நால்வரும் இணைந்து நாயை தேடுகின்றனர்.
இந்நேரத்தில் மாநகராட்சி சார்பில் நாய் பிடிப்பவர்கள் தொலைந்து போன நாயை பிடித்து சென்று விட ,,,,முடிவில் சிறுவர்கள் நால்வரும் தேடும் நாய் அவர்களுக்கு கிடைத்ததா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘ஷாட் பூட் த்ரீ’
இயக்குநர் வெங்கட் பிரபு - சினேகா பெற்றோர்களாக அமைதியான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
கைலாஷ் , வேதாந்த், பூவையார் மூன்று சிறுவர்களுடன் , சிறுமி பிரணித்தியும் இயல்பான நடிப்பில் ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்கள் .
யோகி பாபு வரும் காட்சிகள் காமெடியாக இருக்கும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே !
சாய் தீனா, சிவாங்கி, இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் ஸ்டண்ட் இயக்குநர் சுகேஷ் என மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் ,வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசையும் கதையின் வேகத்திற்கு பக்க பலம் !
தான் பாசமாக வளர்க்கும் விலங்குகள் மீது சிறுவர்கள் இரக்கம் காட்டும் கதையை வைத்து,,,,, இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க,,,, தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் பல பெற்றோர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் அவர்கள் சந்திக்கும் விளைவுகளை அழுத்தமான திரைக்கதையோடு சொல்வதுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு குழந்தைகளுக்கான குடும்ப படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன்.
ரேட்டிங் ; 3 / 5
Comments