top of page
mediatalks001

'இடி மின்னல் காதல்’ - விமர்சனம்


நாயகன் சிபியும் நாயகி பவ்யா ட்ரிகாவும் உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர் .

இந்நேரத்தில் சில நாட்களில் வெளிநாட்டிற்கு செல்ல இருக்கும் நாயகன் சிபி ஒரு இரவு நேரத்தில் காதலி பவ்யா ட்ரிகாவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்குகிறது .

அப்போது திடீரென ஒருவர் காருக்கு குறுக்கே விழுந்து விபத்தாகி கவலைக்கிடமான நிலையில் அந்த நபர் உயிரிழந்து விடுகிறார். தெரியாமல் நடந்த விபத்து என்றாலும், தன்னால் ஒரு உயிர் பலியானதை எண்ணி வருத்தத்தில் இருக்கிறார் நாயகன் சிபி

இதனையடுத்து உயிரிழந்த மனோஜ் முல்லத் மகன் ஆதித்யா தனது அப்பா விபத்தில் இறந்ததை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகி அழுது கொண்டிருக்கும் நிலையில் சிறுவனது வீட்டின் அருகில் இருக்கும் பாலியல் தொழில் செய்யும் யாஷ்மின் பொன்னப்பா ஆதித்யாவிற்கு ஆதரவளிக்க இறந்து போன மனோஜ் முல்லத் வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஆதித்யாவை தாதா வின்சென்ட் நகுல் அழைத்து செல்கிறார் .

ஒரு கட்டத்தில் வின்சென்ட் நகுல் ஆட்கள் சிறுவன் ஆதித்யாவை அழைத்து செல்லும் போது சாமர்த்தியமாக அச் சிறுவனை காப்பாற்றுகிறார் நாயகன் சிபி ஒரு சந்தர்ப்பத்தில் தன் தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்பதை தெரிந்துக்கொள்கிறான் சிறுவன் ஆதித்யா.

முடிவில் சிறுவன் ஆதித்யாவின் தந்தை மனோஜ் முல்லத் விபத்தில் இறந்ததற்கு நாயகன் சிபிதான் காரணமா ?

வெவ்வேறு பிரச்சனைகளில் மன அழுத்தத்திற்கு ஆளான மனோஜ் முல்லத் காரின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் இடி மின்னல் காதல்’

நாயகனாக நடித்திருக்கும் சிபி இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். ,காதல்,செண்டிமெண்ட்,ஆக்க்ஷன் எமோஷனல் என அனைத்தும் கலந்த உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .

நாயகியாக நடித்திருக்கும் அழகான பவ்யா ட்ரிகா கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

வில்லனாக நடித்திருக்கும் வின்சென்ட் நகுல் கண்களாலே மிரட்டுகிறார். சிறுவன் ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு கதாபாத்திரத்தில் கச்சிதமாக செய்திருக்கிறான்.

பாலியல் தொழிலாளியாக யாஷ்மின் பொன்னப்பா,,,, கிறிஸ்தவ பாதிரியராக நடித்திருக்கும் ராதாரவி ,,போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல்,நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஜெகன், சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக நடித்திருக்கும் மனோஜ் முல்லத் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.


எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தை மையமாக வைத்து வேறு இரண்டு கதைகளுடன் ஒரே மையப்புள்ளியில் அனைத்து கதைகளும் இணைக்கும் விதத்தில் திரைக்கதையை உருவாக்கி சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் அனைவரும் ரசிக்கும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி மாதவன் .


ரேட்டிங் ; 3 / 5

Comments


bottom of page