தன் தந்தையை கொலை செய்து ஜெயிலில் தண்டனை அனுபவித்து விடுதலையான நாயகன் வெற்றியும், நாயகி அக்ஷயா கந்தமுதனும் காதலர்களாக இருக்கின்றனர் ..
கொலை குற்றவாளியான வெற்றி ஜெயிலில் தண்டனை அனுபவித்ததால் . இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு பெண் கொடுக்க அக்ஷயா கந்தமுதனின் தந்தை மறுக்கிறார்.
மற்றொரு பக்கம் வாய் பேசாத ரவுடியான முருகன், காணாமல் போன தனது தங்கையை சாப்ளின் பாலுவுடன் தேடுகிறார்.
முருகனின் எதிரிகள் அவரது தங்கை இருப்பதாக சொல்லி வரவழைத்து அதன் மூலம் அவரை கொன்று பழிதீர்க்க முயற்சிக்கிறார்கள்.
ரவுடி முருகன் ஒரு பக்கம் தங்கையை தேடும் நேரத்தில் தான் காதலிக்கும் வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என அக்ஷயா கந்தமுதன் தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வெற்றியை திருமணம் செய்துக்கொள்ள வெற்றியுடன் ஒரு இரவு நேரத்தில் காரில் செல்கிறார் .
இத் திருமணத்தில் விருப்பம் இல்லாத வெற்றி அக்ஷயா கந்தமுதனுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து அவர் மயக்கமான பின் அக்ஷயா கந்தமுதனை அவரது வீட்டிற்கு அழைத்து செல்வதற்கான முயற்சியை மேற்கொள்கிறார் .
முடிவில் தூக்க மாத்திரைகளை உபயோகித்த அக்ஷயா கந்தமுதனின் நிலை என்ன ?
தங்கையை தேடி அலையும் ரவுடி முருகன் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? இல்லையா ?என்பதை சொல்லும் படம்தான் ‘பகலறியான்’
கதையின் நாயகனாக நடிக்கும் வெற்றி கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
ரவுடியாக வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் முருகன்,
நாயகியாக நடித்திருக்கும் அக்ஷயா கந்தமுதன்,,, தேடப்படும் முருகனின் தங்கையாக வினு பிரியா ,, நீண்ட நாட்களுக்கு பின் நடிக்கும் சாப்ளின் பாலு ,போலீஸாக நடித்திருக்கும் சாய் தீனா என படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்
விவேக் சரோவின் இசையும், ஒளிப்பதிவாளர் அபிலாஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைக்கதையுடன் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் கிளைமாஸ்க்கில் யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனையுடன் அனைவரும் ரசிக்கும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் முருகன் .
ரேட்டிங் - 3 / 5
Комментарии