நாயகனான விஜய் கனிஷ்கா வள்ளலார் நெறிமுறைகளை பின்பற்றி எந்த உயிரையும் கொல்லக் கூடாது யாருக்கும் எந்த வித தீங்கும் விளைவிக்கக்கூடாது என்பதால் சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற தீவிர கொள்கையுடன் தனது அம்மா சித்தாரா, தங்கை அபிநக்ஷத்ரா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
விஜய் கனிஷ்காவின் வாழ்க்கையில் திடீரென்று நுழையும் முகமூடி அணிந்த மனிதன் அவரது அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்துக்கொண்டு உன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் விஜய் கனிஷ்காவை இரண்டு கொலைகளை செய்யச் சொல்கிறான் .
முடிவில் அமைதியான குணம் கொண்ட விஜய் கனிஷ்காவை முகமூடி மனிதன் இரண்டு கொலைகளை என்ன காரணத்திற்காக கொலை செய்யச் சொல்கிறான் ?
முகமூடி மனிதரிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிய அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா காப்பாற்றினாரா ?
இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி சரத்குமார் இறுதியில் முகமூடி மனிதன் யார் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஹிட் லிஸ்ட்’
இயக்குனர் விக்ரமனின் மகனான அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா உணர்வுபூர்வமான நடிப்பில் தன் அம்மா, தங்கையை காப்பாற்றுவதற்காக வில்லன்களிடம் மோதும் காட்சிகளிலும் காவல்துறை மற்றும் முகமூடி மனிதன் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகளிலும் தேர்ந்த நடிகராக கதாபாத்திரத்துடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
கம்பிரமான காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சரத்குமார் , விஜய் கனிஷ்காவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிரட்டும் வில்லனாக ராமச்சந்திர ராஜு ,மக்களின் பிரச்சனைக்காக போராடும் டாக்டராக ஸ்மிருதி வெங்கட், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண் ஒளிப்பதிவும் ,, இசையமைப்பாளர் சி.சத்யா இசையும் படத்திற்கு பக்க பலம் .
வித்தியாசமான விறுவிறுப்பான கதையாக ஒரு முகமூடி மனிதன் நாயகனை கொலை செய்ய சொல்லி கட்டளை இடுவதும்,,, இணைய தளம் வழியே தான் செய்ய சொல்லும் கொலைகளுக்கு மக்களிடம் அவன் நியாயம் கேட்கும் போதும் ,,, யார் இந்த முகமூடி மனிதன் என படம் பார்க்கும் ரசிகர்கள் யோசிக்கும் நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத திருப்புமுனையான அதிரடி முடிவுடன் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக இயக்கியுள்ளனர் இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கல்லர் - கே.கார்த்திகேயன்
ரேட்டிங் - 3.5 / 5
வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் !
Comentários