top of page
mediatalks001

'வெப்பன்' - விமர்சனம்





இயற்கை வளத்தின் மீதும் காட்டில் வாழும் உயிரினங்கள் மீதும் அதிக பற்று வைத்திருக்கும் நாயகன் வசந்த் ரவி சூப்பர் ஹியூமன்ஸ் பற்றி வீடியோ பதிவிட்டு விருது வாங்குமளவில் சிறந்த யூடியூபராக விளங்குகிறார் .


இந்நேரத்தில் தேனி அருகில் லாரி விபத்தில் சிக்க இருக்கும் ஒரு சிறுவன்

அறியப்படாத சக்தியால் காப்பாற்றப்படுகிறான்.

காப்பாற்றப்படும் சிறுவனை தேடி வசந்த் ரவி நாயகி தான்யா ஹோப்புடன் சேர்ந்து ஒரு குழுவுடன் தேனி செல்கிறார் .

மற்றொரு பக்கம் பிளாக் சொசைட்டிக்கு தலைவராக இருக்கும் ராஜீவ் மேனன் சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவர்களுக்கு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாதென மிரட்டல் விடுக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ராஜீவ் மேனன் குழுவினர் ஒவ்வொருவரும் கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தியினால் கொல்லப்படுகின்றனர்.

இந்த கொலைகளுக்கு காரணம் சூப்பர் ஹியூமன் சக்திதான் என தெரிந்து கொள்ளும் ராஜீவ் மேனன் அந்த சக்தியை தேடி கொல்ல அதிரடி பலம் கொண்ட ஒருவனை அனுப்புகிறார் . மற்றொரு பக்கம் வேலு பிரபாகரன் தன் அடியாட்களை வைத்து அந்த சக்தியை அழிக்க தேடுகிறார் .

முடிவில் ராஜீவ் மேனனும் , வேலு பிரபாகரனும் அந்த மாபெரும் சக்தியை அழித்தார்களா ?

தேனிக்கு சென்ற வசந்த் ரவி சூப்பர் ஹியூமனை கண்டுபிடித்தாரா ? வசந்த் ரவி யார் ? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு? என்பதை சொல்லும் படம்தான் 'வெப்பன்'


கதையின் நாயகனாக நடிக்கும் வசந்த் ரவி இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் அமைதியாகவும் முடிவில் அதிரடி நாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


கதையின் மற்றொரு நாயகனான சத்யராஜ் ஆக்‌ஷன், நடிப்பு, செண்டிமெண்ட் என அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்


நாயகியாக தான்யா ஹோப் ,அமைதியான வில்லனாக ராஜீவ் மேனன் ,வேலுபிரபாகரன் .மைம் கோபி ,யாஷிகா ஆனந்த் ,கனிகா ,கஜராஜ் ,மேக்னா சுமேஷ் ,வினோதினி ,மாயா என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .


ஜிப்ரான் இசையும் , பிரபு ராகவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


ஹாலிவுட் பாணியில் சிறுவர்கள் விரும்பும் சூப்பர் ஹியூமன் கதையாக ,,, தமிழில் புதுமையான படமாக இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார் .

திரைக்கதையில் கூடுதலாக கிராபிக்ஸ் காட்சிகளை இணைத்திருந்தால் தமிழில் ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு அமைந்திருக்கும் .


ரேட்டிங் - 3 / 5

Kommentare


bottom of page