தேனி மாவட்டத்தில் நாயகியான மனைவி வைரமாலாவுடன் வாழ்ந்து வரும் நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரிக் வேலை செய்து வந்தாலும், மது பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் வெட்டியாய் திரியும் நண்பன் ரமேஷ் வைத்யாவுடன் எந்த நேரமும் குடித்து கொண்டு வாழ்க்கையை வீணடிக்கிறார் .
இதனால், அவரது மனைவி வைரமாலாவுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது.
திருமணம் ஆகி சில வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாததால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் குங்குமராஜ் அவமானப்படுகிறார் .
கதாநாயகன் குங்குமராஜின் எதிர்வீட்டில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளியான வட மாநில வாலிபர் பர்வேஸ் மெஹ்ரூக்கும் மனைவி வைர மாலாவுக்கும் அக்கா - தம்பி என்கிற அளவில் ஆத்மார்த்தமான உறவு இருக்கிறது, மனைவி,,,,,, தம்பி போல பழகினாலும் ,,,,பழகுவது சுத்தமாக குங்குமராஜுக்கு பிடிக்காதததால் தன் கோபத்தை பர்வேஸ் மெஹ்ரூ மீது காட்டுகிறார்.
இந்நேரத்தில் அவரது மனைவி வைரமாலாவிடம் தன் சொந்த ஊருக்கு போகும் சூழ்நிலையில் பர்வேஸ் மெஹ்ரூ ஒரு பையை கொடுக்கிறார்.
இதற்கிடையில் பர்வேஸ் மெஹ்ரூ பழகுவதால் வைர மாலாவுக்கும் குங்குமராஜிக்கும் ஏற்படும் தகராறில் மனைவியை அடித்து உதைக்கும் குங்குமராஜை தடுக்க முற்படுகிறார் பர்வேஸ் மெஹ்ரூ .
இதனால் ஆத்திரமடையும் குங்குமராஜ் நண்பன் ரமேஷ் வைத்யாவுடன் சேர்ந்து பர்வேஸ் மெஹ்ரூவை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார் .
இந்நேரத்தில் பர்வேஸ் மெஹ்ரூ சாலை விபத்தில் திடீரென்று மரணமடைய, அவரது இறுதி சடங்கிற்காக மும்பையில் வசிக்கும் பர்வேஸ் மெஹ்ரூ வின் குடும்பத்தினர் தேனி வருகிறார்கள்.
இறுதிச் சடங்கு முடிந்த பிறகு பர்வேஸ் மெஹ்ரூ வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தார் கேட்கிறார்கள். அப்போது தான் வைரமாலாவுகு பர்வேஸ் மெஹ்ரூ தன்னிடம் கொடுத்த பை நினைவு வருகிறது.
பை வைத்த இடத்தில் எடுக்க செல்லும் போது அந்த பை அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைகிறார் வைரமாலா .
முடிவில் பையை எடுத்தது யார் ? இறுதியில் பர்வேஸ் மெஹ்ரூ குடும்பத்திற்கு வைரமாலா பணத்துடன் உள்ள பையை அவர்களிடம் ஒப்படைத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'ரயில்'
நாயகனாக நடிக்கும் குங்குமராஜ், நாயகியாக நடிக்கும் வைரமாலா இருவருமே இயல்பான வாழ்வியலில் கிராம சூழலில் வாழும் மண் மணம் மாறாத மனிதர்களாக வாழ்கின்றனர் .
குங்குமராஜ் இயல்பான நடிப்பில் இயலாமை ,விரக்தி,வெறுப்பு என கதையுடன் இணைந்து நடிப்பில் பயணிக்கும்போது அவருக்கு இணையாக கதாபாத்திரமாகவே நடிப்பில் வாழ்கிறார் நாயகி வைரமாலா
வட இந்திய வாலிபர் வேடத்தில் நடிக்கும் பர்வேஸ் மெஹ்ரூ, நாயகனின் குடிகார நண்பராக நடிக்கும் ரமேஷ் வைத்யா, நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் செந்தில் கோச்சடை, பர்வேஸ் மெஹ்ரூவின் தந்தையாக நடித்திருக்கும் பிண்ட்டூ , மனைவியாக நடிக்கும் ஷமீரா, அம்மாவாக வரும் வந்தனா,குழந்தை பேபி தனிஷா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ,,எஸ்.ஜே.ஜனனியின் இசையும் படத்திற்கு பக்க பலம்
வட மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக தமிழ்நாட்டில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளியின் வாழ்வியலை மையமாக கொண்ட கதையுடன் ,,,, உழைப்பின் மீது நாட்டம் இல்லாமல் தமிழக இளைஞர்கள் பல பேர் குடி போதைக்கு அடிமையாவதால் வட மாநிலத்தவர்களுக்கு இங்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்வதுடன் , கிராம மக்களின் வாழ்வியலுடன் சினிமாத்தனம் இல்லாத வெகு நாட்களுக்கு பின் இயக்குனர் பாரதிராஜா படம் போல இயல்பான படத்தை பார்த்த உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாஸ்கர் சக்தி .
அழுத்தமான கதைக்களத்தில் கிராமத்து வாழ்வியலை முன்னிறுத்தும் இயல்பான படம்
ரேட்டிங் - 3.5 / 5
Comments