top of page
mediatalks001

’மெய்யழகன்’ - விமர்சனம்!



அரவிந்தசாமியின் பள்ளி பருவ காலத்தில் சொந்த உறவுகளின் துரோகத்தால் குடியிருக்கும் வீடுடன் சொத்தை இழந்து இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் சென்று, சென்னையில் குடியேறுகிறார் ஜெயபிரகாஷ்.


அரவிந்த்சாமியின் குடும்பம் 20 வருடங்களாக சொந்த ஊர் மற்றும் சொந்தங்களின் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.


சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய நிலையில் குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தஞ்சாவூர் செல்கிறார் .


மனது நிறைய தங்கை மீது பாசம் இருந்தாலும், உறவினர்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்லும் அரவிந்த்சாமிக்கு, திருமணத்தின்போது உறவினர் கார்த்தி அறிமுகமாகி, அவரிடம் மிகவும் உரிமையுடன் அன்பாக பழகுகிறார் ..


கார்த்தி எந்தவிதத்தில் உறவு, அவர் பெயர் என்ன? என்பது கூட தெரியாமல், தெரிந்தது போல் அவருடன் பழகும் அரவிந்த்சாமி, முடிவில் வெள்ளந்தித்தனமாக பேரன்புடன் பழகும் கார்த்தி மூலமாக தன்னைப் பற்றியும், மேன்மையான உறவுகளின் புரிதலை பற்றியும் அரவிந்த்சாமி அறிந்து கொள்ளும் படம்தான் ‘மெய்யழகன்’.


கதையின் நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, நடிப்பு, பேச்சு, உடல் மொழி, வெகுளித்தனம், பாசம் என உணர்வுபூர்வமான நடிப்பை மிக அழகாக வெளிக்காட்டி மெய்யழகன் கதாபாத்திரமாக மக்கள் மனதில் இயல்பான நடிப்பில் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறார்

கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி எதார்த்த நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்.


கார்த்தியின் மனைவியாக நடித்த ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவும் , கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கு பக்க பலம் .


அழகிய இயல்பு நிறைந்த வாழ்வியலான கதையுடன் ஒரு இரவு பயணத்தில் சொந்த உறவுகளின் உணர்வுகளை அழுத்தமுள்ள திரைக்கதையில் சொல்வதுடன் தமிழர்களின் வரலாறு, வீரம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஈழத்தமிழர்கள் படுகொலை என சமூக கருத்துகளை உணர்ச்சியுள்ள தமிழன் வெளிப்படுத்தும் ,,,,,பாராட்டுக்குரிய காட்சிகளுடன் தரமான படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் சி.பிரேம்குமார்.


ரேட்டிங் - 3.5 / 5

Comments


bottom of page