Cast : Dr.Ditto, Magesh, Deepshika, Simran, Chaams, Madhumitha, Thidiyan, Chaplin Sundar, Mani, Lakshmi, Pushpatha
Crew ;
Directed By : Sagayanathan
Music By : T.S. Muralidharan, Background Music - Sirpy
Produced By : Sri Chitra Pournami Film - V. Manibhai1990
ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறும் கதையாக ஒரே பள்ளியில் நாயகர்கள் டிட்டோ, மகேஷ் மற்றும் நாயகி தீபிக்ஷா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். தாய், தந்தை இல்லாத மகேஷ் மீது தீபிக்ஷா இரக்கம் காட்ட, அதை காதல் என்று புரிந்துக்கொள்ளும் மகேஷ், அவரை ஒருதலையாக காதலிக்கிறார்.
ஆனால், தீபிக்ஷா மகேஷின் நண்பர் டிட்டோவை ஒருதலையாக காதலிக்கிறார். மகேஷ் தீபிக்ஷாவிடம் தனது காதலை சொல்ல, அதை அவர் நிராகரித்து விடுகிறார்.
காதலால் படிப்பில் கவனம் செலுத்தாத மகேஷ் நடைபெற்ற பொதுத் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார். மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்று பொறியியல் பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறி விடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் தீபிக்ஷாவின் மனதில் இருக்கும் டிட்டோ அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது . ஆனால், நண்பன் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வது துரோகம், என்று கருதும் டிட்டோ தீபிக்ஷாவை நிராகரித்து விடுகிறார். தான் ஆசைப்பட்டாலும், விருப்பம் இல்லாதவரை மணக்க கூடாது என்று தீபிக்ஷாவும் டிட்டோவை நிராகரித்து விடுகிறார் .
முடிவில் தீபிக்ஷா திருமணம் செய்து கொண்டவர் யார் ? அதன் பின் அவர் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் என்ன? என்பதை சொல்லும் படம்தான் 'செல்ல குட்டி'
நாயகர்களாக நடித்திருக்கும் அறிமுக நடிகர்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக
பள்ளி மாணவர்களாகவும், படிப்பு முடிந்து முதிர்ச்சி அடையும் காலக்கட்டத்திலும் நடிப்பில் வித்தியாசப்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
நாயகியாக நடித்திருக்கும் தீபிக்ஷா, மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கின்றனர் .
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மதுமிதாவும், ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸும் சில காட்சிகளில் சிரிக்க வைக்க வைக்கின்றனர் . மற்றும் திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பலதா என அனைத்து நடிகர்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை .
டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் மெல்லிசை. சிற்பியின் பின்னணி இசை அசத்தல் .
ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஆகியோரது ஒளிப்பதிவு தரம் .
முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு காதலை பல திருப்பங்களுடன் பயணிக்க வைத்து, உண்மையான காதலை அழகான வாழ்வியலுடன் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ’சிந்துநதி பூ’ செந்தமிழன் நேர்த்தியுடன் குடும்பத்துடன் பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சகாயநாதன்.
RATING- 3 / 5
Opmerkingen