top of page
mediatalks001

  ‘பிளாக்’ - விமர்சனம் !


1964ம் ஆண்டுஒரு நாளில்  பூமிக்கு அருகில் முழு நிலவு தோன்றும் இரவு நேரத்தில்    காரில் பயணம் செய்யும் காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களது நண்பன் விவேக் பிரசன்னா தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார்.

தான் காதலித்த பெண் தன் நண்பனின் காதலியாக இருப்பதினால் இருவரையும் கொல்ல துப்பாக்கியுடன் விவேக் பிரசன்னா வீட்டிற்குள் நுழைய ,, அதற்கு முன்னே துப்பாக்கி சுடும் ஒசை கேட்க வீட்டிற்கு வரும்விவேக் பிரசன்னா அங்கே துப்பாக்கியால் சுடப்பட்டு  காதல் ஜோடி இறந்து கிடப்பதும், அவர்களை கொன்றது யார் என்ற கேள்வியுடன்1964ம் ஆண்டு நடைபெறும் காட்சிகள் முடிவடைந்த பின்னர்,,,,,இன்றைய கால கட்டத்தில் நடக்கும் கதையாக,,,

 

ஜீவா - பிரியா பவானி சங்கர் ஜோடி தங்களது விடுமுறை நாட்களை சந்தோசமாக கொண்டாட கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்கு பின்னர் பூமிக்கு அருகில் முழு நிலவு தோன்றும் இரவு நேரத்தில்    சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் வில்லா குடியிருப்பில் யாரும் குடியேறாத நிலையில்,இவர்கள் மட்டும் அங்கிருக்கும் வீடு ஒன்றில் குடியேறுகிறார்கள்.


அவர்கள் வீட்டுக்குள் வந்த சில நிமிடங்களில் அங்கிருந்த ஒரே ஒரு காவலாளி திடீரென்று காணாமல் போக, மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் எதிர் வீட்டில் விளக்குகள் எரிகிறது.


யாரும் இல்லாத வீட்டில் எப்படி விளக்குகள் எரிகிறது என்ற யோசனையோடு இருவரும் அந்த வீட்டின் அருகே சென்று பார்க்கும் போது, இவர்களது வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் போலவே அந்த வீட்டுக்குள் இருப்பதோடு, அந்த வீட்டுக்குள் இவர்களைப் போல உருவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் இருவரும், நடப்பது நிஜமா?  அல்லது வேறு எதாவது அனுமாஷ்ய சக்தியின் ஆட்டமா ?   என்று குழப்பமடைகிறார்கள்.

ஏதோ ஒரு பிரச்சனையில் இருப்பதை தெரிந்து கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அது முடியாமல் போவதோடு, தொடர்ந்து அவர்களை சுற்றி பல மர்மமான சம்பவங்கள் அவர்கள் கண்முன்னே  நடக்கிறது.


முடிவில் ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் மர்மமான வில்லாவிலிருந்து தப்பித்தார்களா ? புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகள் எதனால் நடக்கிறது? அது அமானுஷ்யமா அல்லது அதற்கு அறிவியல் மாற்றமா? என்பதை சொல்லும்  திகில், மர்மம், நிறைந்த திரில்லர் படம்தான்  ‘பிளாக்’.


கணவன்-மனைவியாக நடிக்கும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் அனைத்துவிதமான உணர்வுகளுடன் தாங்கள் எதிர்கொள்ளும்  , குழப்பமான சம்பவங்களை பயம் கலந்த  பதற்றத்துடன் சிறப்பான நடிப்பில்  அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 



சாம். சி எஸ் இசையும்,,,,ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


2013ல் வெளியான ஹாலிவுட் படமான 'கோஹரன்ஸ்' படத்தின் ரீ மேக் படமாக ,,,,,, தம்பதிகள் இரண்டு பேர், கடற்கரையோரம் இரவு நேரத்தில் ஆரவாரமற்ற அமைதியான வீட்டில் சந்திக்கும் திகிலான சம்பவங்களை  நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு அறிவியல் தான் காரணமாக இருக்குமோ பார்வையாளர்களை யோசிக்க வைக்கும் அறிவியல் சம்பந்தப்பட்ட  கதையுடன் வித்தியாசமான விறு விறுப்பான பதட்டமான திரைக்கதை அமைப்புடன் மர்மம் கலந்த திகில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி.


ரேட்டிங் - 3.5 / 5













Comments


bottom of page