கல்வி என்பது அனைவருக்கும் சமம். அந்த கல்வி ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று நினைக்கும் ஆசிரியர் உயர் வர்க்கத்தினர் அதிகாரத்தில் இருக்கும் மாங்கொல்லை கிராமம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே பள்ளி ஒன்றை உருவாக்குகிறார்.
அதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்களை கல்வி கற்க செய்து அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்க முயற்சிக்கிறார்.
கல்வி கற்றால் அவர்களை அடிமைப்படுத்த முடியாது, என்று நினைக்கும் உயர்சாதி வர்க்கத்தை சேர்ந்த ஜெயபாலன் மற்றும் அவரது சொந்தங்கள் பள்ளியை அழிப்பதற்கு பல சதிவேலைகளை செய்கிறார்கள்.
ஆனால், பள்ளியை உருவாக்கிய ஆசிரியரை அடித்து சித்த பிரமை பிடித்தவர் போல ஆக்க முடிந்ததே தவிர அந்த பள்ளியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை .
இந்த பிரச்சனை ஆசிரியரின் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ஆசிரியரின் மகன் பருத்தி வீரன் சரவணனும் ஆசிரியர் ஆகிவிட. அப்பா போல் அந்த பள்ளியின் மூலம் பலருக்கு கல்வி அறிவை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுபவர் அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்த நினைக்கிறார்.
அங்கேயும் உயர்சாதியினரின் அடுத்த தலைமுறை முட்டுக்கட்டை போட, அவர்களின் சதியால் பருத்தி வீரன் சரவணனுக்கு பைத்தியக்காரர் பட்டம் கிடைக்கிறது .
இந்நிலையில் வெளியூரில் ஆசிரியராக வேலை செய்யும் சரவணனின் மகன் விமல் மாற்றலாகி அவரது பள்ளியிலே வேலைக்கு வருகிறார் .
சரவணனின் மகனான விமலும் அவர்கள் செய்ய நினைத்த அந்த பள்ளியில் மேல்நிலை வகுப்பு வருவதற்கான முயற்சியை மேற்கொள்கிறார் .
ஆனால், அவரது முயற்சிக்கும் முட்டுக்கட்டைப் போடும் உயர்சாதியினரின் வாரிசான சிராஜ், விமலுடன் நட்பாக பழகினாலும் அவரது லட்சியத்திற்கு எதிராக சதி வேலைகளை செய்கிறார்.
இரண்டு தலைமுறைகளாக கல்வி கொடுக்க போராடும் ஆசிரியர்களை சூழ்ச்சியால் பைத்தியக்காரர்களாக்கி குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு கல்வி கிடைக்கவிடாமல் செய்பவர்களுக்கு மூன்றாம் தலைமுறை ஆசிரியரான விமல் உயர் சாதியினரின் சூழ்ச்சிகளையும் ,, தடைகளையும் முறியடித்து நடுநிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக மாற்றினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான்’’ சார்’’
கதையின் நாயகனாக அழுத்தமான ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல் ஆரம்பத்தில் காதல் காட்சிகளிலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் வழக்கமான பாணியில் நடித்தாலும் இறுதியில் ஆக்ஷன் நாயகனாக இயல்பான நடிப்பில் அசத்துகிறார் .
நாயகியாக கதைக்கேற்றபடி நடிக்கும் சாயா தேவி ,விமலின் தந்தையாக நடித்திருக்கும் ‘பருத்திவீரன்’ சரவணன், விமலின் நண்பராக வலம் வந்தாலும், சாதி வெறியால் விமலை கொல்ல துடிக்கும் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் சிராஜ், ரமா, ஜெயபாலன், கஜராஜ், சரவண சக்தி, விஜய் முருகன், ப்ரனா, எலிசபெத் என நடித்தவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷின் ஒளிப்பதிவும்
சித்து குமார் இசையும் படத்திற்கு பக்க பலம் .
.ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக்கி அதனால் நாங்கள் உயர் சாதியினர் என பெருமையாக சொல்லி கொள்பவர்களின் கதையை மையமாக கொண்டு பள்ளி ஆசிரியர்கள் பணி அதன் சிறப்பு மற்றும் கிராமப்புறங்களில் பணி புரியும் ஆசிரியர்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லும் ஆழமான அழுத்தமான திரைக்கதையுடன் ‘’ஆசிரியர் பணியே அற பணி அதற்கு உன்னை அர்ப்பணி’’ என்ற வாக்கியத்திற்கேற்ப கல்வியை முன்னிறுத்தி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் போஸ் வெங்கட்.
ரேட்டிங் - 3 / 5
Comments