"Aindham Vedham"
ZEE5 Original
Starring:
Sai Dhansika
Santosh pratap
Vivek Rajagopal
Y.G. Mahendran
Krisha Kurup
Ramjee
Devadarshini
Mathew Varghese
Ponvannan
PRODUCER
ABIRAMI RAMANATHAN
NALLAMAI RAMANATHAN
DIRECTOR NAGA
DOP SRINIVASAN DEVARAJAN
MUSIC DIRECTOR REVAA
EDITOR REJEESH. M. R.
PRODUCTION DESIGNER A.AMARAN
2nd unit DIRECTOR ANAND BABU. S
Co DIRECTOR RAJESH SOOSAIRAJ
EX. PRODUCER SARAVANAKUMAR
PRODN. MANAGER P.SOMASUNDARAM
CASTING DIRECTOR B. MANOJ KRISHNA
ASSO. DIRECTOR K. KRISHNAMURTH
ASST. DIRECTOR S. KADAPPAN
ASST. DIRECTOR GAUTHAM
COSTUME DESIGNER NIVETHA JOSEPH & BHARATHI DASAN
Art Director G.RAJKUMAR
DI REELBOYZ
Colorist Shyam
Sync Sound RAJA
Sound engineer Harish
SOUND designer A. MANIKANDAN
CG Pixel Arts (DURAI)
Sub-Titling Rekhs
ABIRAMI MEGA MALL PVT LTD
Dr. SRINIVASAN (CEO)
AJAI KAPOOR (HEAD OF OPERATIONS)
தொடரின் கதையை விரிவாக பார்க்கும்போது
இன்றைய தலைமுறையின் Aஐ அறிவியலுடன் ,,,, ரிக்வேதம், சாமவேதம், யஜுர்வேதம் மற்றும் அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐந்தாம் வேதம் ஒன்று இருக்கிறது என்றும், அதன் மூலமாகவே பிரம்மன் மனிதர்களை படைத்தார் என்ற கற்பனையை மர்ம பின்னணியுடன் சொல்லும் திரில்லர் இணையத் தொடர் தான் ‘ஐந்தாம் வேதம்’.
சாமியார் ஒருவர் காசியில் பூஜைக்காக சென்ற சாய் தன்ஷிகாவிடம் மரப்பெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, அதனை தமிழகத்தின் தென்கோடியில் உள்ள அய்யங்கார்புரம் என்ற கிராமத்திற்கு எடுத்துச் செல்ல சொல்கிறார்.
எடுத்து செல்லும் மரப்பெட்டியை உன் வம்சாவளியை சேர்ந்தவர்களிடம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்பது விதி என்று கூறி அதை சாய் தன்ஷிகாவின் கையில் கொடுத்ததும் அவர் இறந்து விடுகிறார்.
இந்நிலையில் மரப் பெட்டியை எடுத்து கொண்டு தமிழகத்திற்கு வரும் சாய் தன்ஷிகா அங்கிருந்து பாண்டிச்சேரி செல்ல திட்டமிடுகிறார்.
ஆனால், அதற்கு பின்னால் நடக்கும் திடீர் சம்பவங்கள் சாய் தன்ஷிகாவை அய்யங்கார்புரத்திற்கு வர வைத்து விடுகிறது.
அங்கிருக்கும் பழமை வாய்ந்த கோவிலுக்குச் சென்று, அங்குள்ள பூசாரியிடம் மரப் பெட்டியை கொடுக்கிறார் சாய் தன்ஷிகா. மரப் பெட்டியைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்த பூசாரி, அதனை வாங்க மறுத்துவிடுகிறார்.
மிக பழமையான இந்த சிவாலயத்தில் ரகசிய இடத்தில் இருக்கும் ஐந்தாம் வேதம் வெளி வரவேண்டிய நாளுக்காக அந்த கோவில் பூசாரி காத்துக் கொண்டிருக்க, இந்நேரத்தில் ஐந்தாம் வேதத்தின் மூலம் இந்த உலகத்தில் மனிதர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறிவியல் துறையைச் சேர்ந்த சிலர் ஐந்தாம் வேதத்தை தேடும் நிலையில்,, மறுபக்கம், மாமிசத்தை கொண்டு 3டி பிரிண்ட் மூலம் அப்படியே அசல் மாமிசத்திலான உருவத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு கூட்டம் ஈடுபடுகிறது.
அவர்களும் ஐந்தாம் வேதத்தை கைப்பற்ற முயற்சிக்க, முடிவில் ஐந்தாம் வேதம் ஒன்று இருப்பது உண்மையா?, அந்த ஐந்தாம் வேதத்தை தேடுபவர்கள் அதனை கண்டுபிடித்தார்களா? இல்லையா ? என்பதை சொல்லும் தொடர்தான் ‘ஐந்தாம் வேதம்’.
தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், தேவதர்ஷினி, கிருஷ்ணா குரூப், வெள்ளரிக்கா ராம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், மேத்தீவ் வர்கீஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதையுடன் இணைந்து மிக சிறப்பாக நடித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜனின் ஒளிப்பதிவும் ரேவாவின் இசையும் தொடருக்கு பக்க பலம்.
பல வருடங்களுக்கு முன் மர்மதேசம் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நாகா, ஐந்தாம் வேதம் என்ற புராணக் கதையை கையில் எடுத்து அதை நேர்த்தியான அறிவியல் மூலம் உயிரோட்டம் அளிக்கும் வகையில் அனைத்து அத்தியாயங்களுடன் புராணத்தை ஏஐ தொழில்நுட்பமானது தவறான பாதைக்கு எடுத்துச் செல்லும் என்ற விஷயத்தையும் இத்தொடரில் அழுத்தமாக சொல்வதுடன் மர்மம் நிறைந்த காட்சிகளோடும், சுவாரஸ்யமான திரைக்கதையோடும் தொடரை இயக்கியுள்ளார் இயக்குனர் நாகா .
ரேட்டிங் - 3.5 / 5
Comments