தற்போதைய நிகழ் காலகட்டத்தில் வெளிநாட்டில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் இருந்து சிறுவன் ஒருவன் தப்பித்துவிட, அந்த சிறுவனை துப்பாக்கியுடன் ஒரு கும்பல் துரத்துகிறது.
அந்த சிறுவன் கோவாவில் இருப்பதை அறிந்த அந்த கும்பல் அங்கு செல்கிறது.
கோவாவில் குற்றவாளிகளை பிடித்துகொடுக்கும் வேலையை செய்து வரும்
சூர்யாவின் கண்களில் படுகிறார் அந்த சிறுவன்.
சிறுவனைக் கண்டதும் ஒரு இனம் புரியா உணர்வு சூர்யாவிற்கு. ஏற்பட,,,,,அவன் மூலம் சூர்யாவின் முன் ஜென்மம் நினைவுக்கு வர, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 1070ம் ஆண்டு காலக்கட்டத்தில் இயற்கை வளம்அதிகம்உள்ளஐந்துதீவுகள் கொண்ட நிலப்பரப்பில்அருகருகே வெவ்வேறுவாழ்வியலை உணர்வுகளை கொண்ட மக்கள்
வாழ்ந்து வருகின்றனர்.
ஐந்துதீவுகளில் ஒரு தீவான பெருமாச்சியை ஆளும் தலைவரின் மகனாக
வாழ்கிறார் சூர்யா.
மற்றொரு தீவான இரத்தத்தை கடவுளாக வணங்கும் இரக்கம் அற்ற இனமான உதிராவின் தலைவராக வாழ்கிறார் பாபி தியோல்.
இந்த இரு தீவுகளுக்கும் இடையே நீண்ட நாள் பகை இருந்து வருகிறது.
இந்நிலையில் ரோமானியப் படையினர் பெருமாச்சியை கைப்பற்ற நினைக்க
அவர்களிடம் தங்கத்தை வாங்கி கொண்டு பெருமாச்சி வீரர்களை கொன்று
விடுகிறார் நட்டி நட்ராஜ்.
மற்றொரு பக்கம் சூர்யா தலைமையிலான பெருமாச்சியை வீழ்த்துவதற்காக
உதிராவின் உதவியை ரோமானியப்படை நாடுகிறது.
உதிராவின் தலைவர் பாபிதியோல் பெருமாச்சியின் மீதான தனது பகையை தீர்த்துக்கொள்ள, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி,மேலும் சில தீவுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு பெருமாச்சி மீது போர் தொடுக்கிறார் .
இந்நேரத்தில் பாபி தியோல் தன் படையோடு சென்று பெருமாச்சியை
அழிக்க நினைக்கும் சமயத்தில் பாபி தியோலின் மகன் இருவரை கொன்று
விடுகிறார் சூர்யா.
இதனையடுத்து சூர்யா, தனது மக்களை கொன்றவர்களை பழிதீர்ப்பதோடு, எதிரிகளை அழிக்க நினைக்கிறார் .
முடிவில் தன் மக்களை கொல்ல நினைக்கும் எதிரிகளிடமிருந்து சூர்யா தன் மக்களை காப்பாற்றினாரா? நிகழ்கால ஆண்டில் வாழும் சூர்யாவுக்கு முன் ஜென்மத்தை நினைவுப்படுத்திய அந்த சிறுவன் யார்? என்ற கேள்விகளுக்கான விடையை ஃபேண்டஸி மற்றும் ஆக்ஷனோடு
சொல்லும் படம்தான் ‘கங்குவா’.
கங்குவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா கம்பீரமான தோற்றததில் மிரட்டலாக ஒவ்வொரு காட்சியிலும் தோற்றம், பார்வை, உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தையும் மிக நேர்த்தியாக நடிப்பில் ரசிகர்களின் கவனத்தை பெறுகிறார். நிகழ்கால சூர்யாவின் தோற்றமும், இளமையும் ரசிக்கும்படி இருக்கிறது .
சிறப்பு தோற்றத்தில் வருகிறார் கார்த்தி
ஒரு பாடலில் கவர்ச்சியாக கதாநாயகியாக நடித்திருக்கும் திஷா பதானி , மிரட்டும் வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோல் ,யோகி பாபு. ரெடின் கிங்ஸ்லி. நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரேம் குமார் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையும் ,ஒளிப்பதிவாளர் வெற்றியின்
ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
நிகழ்காலத்துடன் வரலாற்று பின்னணியை மையமாக கொண்ட கதையை
முன்ஜென்மகதையாக திரைக்கதை அமைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு நடக்கும் கதைக்களம், தமிழின் முதல்3d பான்இந்தியன் ,, அதில் முக்கிய கதாபாத்திரமான கங்குவாவை வடிவமைத்த விதம் என
ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் சிறுத்தை சிவாவின் உழைப்பு
தெரிந்தாலும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பிரம்மாண்டமான வரலாற்று படங்களின் வரிசையில் இந்த படமும்
இணைந்திருக்கும் .
ரேட்டிங் - 3 / 5
Comments