வெள்ளைக்காரன் பிரியாணி ஹோட்டல் என சென்னையில் ஹோட்டலை நடத்தி வருபவர் அபிராமியின் தந்தையான ஒய்ஜி மகேந்திரன்.
அபிராமிக்கு மூன்று மகள்கள்.அபிராமி பார்கவன், மரியா முத்த மகள் மடோனா செபாஸ்டின்
இந்நிலையில் அரசியல்வாதி மதுசூதனன் ஒய்ஜிமகேந்திரன் நடத்தி வந்த ஹோட்டலில் தன் நிகழ்ச்சிக்கு பிரியாணி விருந்து செய்ய சொல்லி அதற்குரிய பணம் செலுத்தாமல் ஒய்ஜிமகேந்திரனை ஏமாற்றுகிறார்.
எம்எல்ஏ மதுசூதனனின் செயலால் பெரும் சிக்கலுக்குள்ளாகிறார்கள்.
ஒய்ஜிமகேந்திரனின் ஆலோசனைப்படி இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக எம்எல்ஏ மதுசூதனனின் தீவிர எதிரியான பொதுநல வழக்கறிஞர் பிரபு தேவாவை சந்திக்க தனது மூன்று பெண்களுடன் அபிராமி செல்கிறார்.
இந்நேரத்தில் பிரபு தேவா தங்கியிருக்கும் ஓட்டல் அறையின் கதவு திறந்திருக்க, அபிராமி மற்றும் அவர்களது மகள்கள் உள்ளே சென்று பார்க்கும் போது பிரபு தேவாஉட்கார்ந்த நிலையில் பிணமாக இருக்கிறார்.
இந்த கொலைப்பழி தங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற பயத்தில் ,அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதற்குள் பிரபு தேவாவின் வங்கி கணக்கில் ரூ.10 கோடி இருக்கும் தகவல் நான்கு பெண்களுக்கும் தெரிய வருகிறது.
இதற்கு பின் பிணமாக இருக்கும் பிரபு தேவா உடலுடன் அபிராமியும் அவரது மகள்களும் வங்கி கணக்கில் இருக்கும் ரூ.10 கோடி அடைய நினைக்கிறார்கள்.
இறுதியில் பிரபு தேவாவின் வங்கி கணக்கில் இருந்து அபிராமி குடும்பத்திற்கு அந்த ரூ.10 கோடி ரூபாய் கிடைத்ததா?
பிரபு தேவாவின் ரூ.10 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தம் ?
ஓட்டல் அறையில் பிரபு தேவாவை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை சொல்லும் படம்தான் ’ஜாலியோ ஜிம்கானா’
கதையின் நாயகனாக வரும் பிரபுதேவா படம் முழுவதும் பிணமாக இயல்பான நடிப்பில் மெனக்கட்டு நடித்திருக்கிறார் .அவரது நடிப்பு பாராட்டும்படி உள்ளது .
அம்மா கதாபாத்திரத்தில் அபிராமி மற்றும் மூத்த மகளாக மடோனா செபாஸ்டியன் ,மடோனா செபாஸ்டியனின் தங்கைகளாக அபிராமி மற்றும் மரியா நடிக்கின்றனர்,
எம் எஸ் பாஸ்கர் ,யோகி பாபுரெடிங் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ், சாய் தினா, ரோபோ சங்கர், கதிர், ஜான் விஜய், கல்லூரி வினோத், ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ் மற்றும் இயக்குநர் சக்திசிதம்பரம் , நிர்வாக தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான ஜெகன் கவிராஜ் என நட்சத்திர பட்டாளமே படம் முழுவதும் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர் .
அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையும் ,ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் பாபு ஓளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
படம் பார்க்கும் ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு கதையில் எந்த லாஜிக்கும் பார்க்காமல் முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பொழுபோக்கு நிறைந்த காமெடிகலாட்டா படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சக்தி சிதம்பரம்
ரேட்டிங் - 3 / 5
Comments