top of page
mediatalks001

''தென் சென்னை'' - விமர்சனம்


கோல்டன் செக்யூரிட்டி சர்வீஸ் எனும் அமைப்பை தன் அடியாட்களுடன் நடத்தி வருகிறார் வில்லன் நிதின் மேத்தா .


பல தொழிலதிபர்கள் செய்யும் பண சூதாட்டத்தில் மொத்தமாக அவர்களது பணத்திற்கு பாதுகாப்பாக சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் துரித உணவகம் ஒன்றில் தன் அடியாட்களுடன் நிதின் மேத்தா கை மாற்றுகிறார் .


இதை தெரிந்து கொண்ட முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் முன்று பேர் கொண்ட குழு தலைமையில் உணவகத்துக்கு சூதாட்டத்தில் வரும் பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறான்.


மற்றொரு பக்கம் இந்திய ராணுவ கடற்படையில் இருக்கும் கதையின் நாயகன் ரங்காவின் தந்தை சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் துரித உணவகம் ஒன்றை நடத்தி வரும்போது தந்தையின் திடீர் மரணத்தால் கடற்படை இராணுவத்தில் பயிற்சியில் இருக்கும் நாயகன் ரங்கா பயிற்சியை தொடராமல் சென்னை வந்து விடுகிறார்.


தந்தை இறந்த பின் அவர் நிர்வாகம் செய்த உணவகத்தை தாய் சுமாவின் அண்ணன் இளங்கோ குமணன் துணையுடன் உணவகத்தை நடத்தி வருகிறார் .


இந்நிலையில் இளங்கோ குமணன் உணவகத்தின் சொத்து பத்திரங்களை நிதின் மேத்தாவிடம் அடமானம் வைத்து உணவகத்துடன் மது கூடம் ஒன்றை தொடங்குகிறார் .


அவர் எதிர்பார்த்த லாபம் இல்லாததால் நிதின் மேத்தாவிடம் உள்ள பத்திரங்களை மீட்பதற்கான முயற்சியில் இறங்குகிறார் இளங்கோ குமணன் .


கொரோனா கால கட்டத்தில் இதன் பின் ஒருநாள் ரங்கா தாய் சுமாவுடன் வெளியே செல்ல செல்லும் வழியில் குப்பை தொட்டியில் கைக்குழந்தை ஒன்று கிடைக்க அங்கு வரும் டாக்டராக இருக்கும் நாயகி ரியா மூல்ம் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் சேர்கிறார்.


குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ரங்கா நினைக்க அதனால் ஏற்படும் பழக்கத்தில் ரியா மேல் ரங்கா காதல் வயப்படுகிறார் .


இதற்கு முன் முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஆணைப்படி முன்று பேர் கொண்ட குழு ரங்காவின் உணவகத்தில் ஆரம்பத்தில் ரூ 5 லட்சத்தை கொள்ளையடிக்கிறது .


ஆத்திரமடையும் நிதின் மேத்தா உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரங்கா சொன்ன தடயங்களை வைத்து பணத்தை கொள்ளையடித்த ஒவ்வொருவரையும் கண்டிபிடித்து அவர்களை கொலை செய்து கடலில் விசுகிறார் .


முடிவில் உணவகத்துக்கு சூதாட்டத்தில் வரும் மொத்த பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் போட்ட அந்த மர்ம மனிதன் யார் ?

குப்பை தொட்டியில் கிடந்த கைக்குழந்தை யாருடையது என்ன காரணத்திற்காக நாயகி ரியா அக் குழந்தை மேல் பாசமாக இருக்கிறார் ? என்பதை சொல்லும் படம்தான் ''தென் சென்னை''



கடற்படை ராணுவ வீரராக கதையின் நாயகனாக நடித்திருக்கும் இயல்பான நடிப்பில் காதல், அம்மா பாசம், குழந்தை பாசம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் ..

படத்தின் ஆரம்பத்தில் வரும் நீச்சல் குளத்தில் இவர் எடுக்கும் பயிற்சி பாராட்டுக்குரியது.


கதைகேற்றபடி சிறப்பாக நாயகியாக நடித்திருக்கும் ரியா ,நாயகனின் அம்மாவாக வரும் சுமா ,நாயகியின் அக்காவாக வரும் சுபா. நிதின் மேத்தா, இளங்கோ குமணன் ,திலீபன் குமார், ‘ஆறு’ பாலா, சுபா, ராம், விஷால் என படத்தில் நடித்த அனைவரும் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர் .


இசையமைப்பாளர் ஜென்மார்ட்டின் இசையும் , சரத்குமார் மோகன் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


கொரானா காலகட்டத்தில் நடைபெறும் கதையாக முகமூடி கொள்ளை அதனை எதிர்க்கும் மிரட்டலான வில்லன் , குடும்ப செண்டிமெண்ட் ,காதல் என அனைத்தும் சேர்ந்த திரைக்கதையில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ரங்கா


ரேட்டிங் - 2. 5 / 5

Kommentare


bottom of page