சேலம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் சங்ககிரி ராச்குமார் தனது சித்தப்பா, தாத்தா, பாட்டி , தங்கை, தம்பி என வாழ்ந்து வருகிறார்.
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் இவருக்கு சென்னையில் இயக்குனர் வாய்ப்பு தேடி அலையும் நேரத்தில் கிராமத்தில் ஜோசியர் ஒருவர் இனி உனக்கு கெட்ட காலம் தான் என கூறியதால் மனமுடைந்த அவரது சித்தப்பா தற்கொலை செய்து கொள்கிறார்.
இதனையடுத்து கிராமத்திற்கு வரும் ராச்குமார். மூட நம்பிக்கையால் இப்படி தனது சித்தப்பா இறந்து விட்டாரே என்று எண்ணி வருந்துகிறார்.
மூட நம்பிக்கையால் அடிமையாய் கிடக்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணிய ராச்குமார் திரைப்படம் ஒன்றை இயக்க நினைக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் யாரும் கிடைக்காததால், தானே தயாரிப்பாளராக மாறுகிறார்
‘வெங்காயம்’ என்ற பெயரில் படத்தை எடுப்பதற்கான பணத்தை தனது தந்தையிடம் தற்கொலை மிரட்டலில் வெற்றி பெற்று பிறகு அந்த கதையை படமாக எடுக்க தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் கொண்டு படத்தை எடுக்க தொடங்கி, அதற்காக தனது வீட்டில் இருந்த ஆடு, மாடு என அனைத்துயும் விற்று இறுதியில் ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடமான நிலத்தை விற்று வாழும் வீட்டை அடமானம் வைத்து படத்தை வெளியிடுகிறார் .
முடிவில் பல போராட்டகளுக்கு பிறகு ராச்குமார் இயக்கத்தில் வெளி வரும் திரைப்படம் வெற்றி பெற்றதா ? இல்லையா? என்பதே ’பயாஸ்கோப்’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராச்குமார் முழு படத்தையும் தன தோல் மீது சுமந்து செல்கிறார். போலியான ஜோசியர்களையும், ஒரு திரைப்படத்தை உருவாக்க எவ்வ்ளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதையும் அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் சத்யராஜ், இயக்குனர் சேரன் கதைக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பா வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மசெல்வன், இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் ரஞ்சித், கதாநாயகியாக நடித்திருக்கும் நிலா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. முரளி கணேஷனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது.
இரண்டு வார பத்திரிகையில் வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார் கிராமத்து மனிதர்களை வைத்து கொண்டு கலகலப்பான திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ரேட்டிங் - 3.5 / 5
Comments