MediaTalks Logo
Header Advertisement
cinema news
2 May 2025 at 23:18•1 Views

‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ - விமர்சனம்

நேர்மையான காவல்துறை அதிகாரியான நாயகன்  நானிக்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் சிறு ஆற்றின் நடுவே தலைகிழாக தொங்க விடப்பட்டு ஒரே பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக கொலை செய்யப்படும்  தகவல் கிடைக்கிறது.

ஒரு கட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆந்திராவுக்கு இடம் மாற்றம் செய்யப்படும்  நானி  கொடுரமான முறையில் நடக்கும் கொலைகளை பற்றி தெரிந்து கொள்ள மன்னிக்க முடியாத இரண்டு கொலை குற்றவாளிகளை அதே பாணியில் கொலைகளை செய்கிறார் .

நானியின் முயற்சியினால் நாட்டின் பல இடங்களில் நடக்கும் கொலையின் பின்னணியில் இருக்கும் கொடூரமான படு பயங்கரமான தலைவன் தலைமையில் இயங்கும் ஒரு கொலைகார கும்பல் இருப்பது அவருக்கு  தெரிய வருகிறது.

படு பாதகமான கொலையாளிகளை அடியோடு வேரறுக்க அவர்கள் அனைவரும் ஓன்று கூடும் இடத்தை தெரிந்து கொண்டு தனி ஒருவனாக அந்த இடத்தை நோக்கி  களத்தில் இறங்குகிறார் .

முடிவில் நானியின் அதிரடியான  கொலை வெறியில் கொலையாளிகள் அனைவரையும் என்ன செய்தார் ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’

அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமான  காக்கி சாட்டை போடாத காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நானிஅதிரடி நாயகனாக சண்டைக்காட்சிகளில் ரசிகர்களுக்கு ஆக்க்ஷன் விருந்து படைக்கிறார் .

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீரிநிதி ஷெட்டி கதைகேற்றபடி இயல்பாக நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .

சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்கின்றனர் .

ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவும்

இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரை கதையாக கொண்டு ஆக்‌ஷனுடன் அதிகமான வன்முறை காட்சிகள் இருந்தாலும் கதையோடு பயணிக்கும்போது படம் பார்க்கும் ரசிகர்களே ஏற்று கொள்ளும்படியான திரைக்கதை அமைப்பில்  கமர்ஷியல் ஆக்க்ஷன் படத்தை உருவாக்கியுள்ளார் சைலேஷ் கொலானு

ரேட்டிங் -   3.5  / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: