MediaTalks Logo
Header Advertisement
cinema news
26 September 2025 at 12:56•1 Views

‘ரைட்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘ரைட்’ - விமர்சனம்

கோவளம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான நாயகன் நட்டி மேலிட  உத்தரவுபடி தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் பாதுகாப்பிற்காக

செல்லும் நேரத்தில் ரைட்டராக இருக்கும்  முணார் ரமேஷிடம் தன் மகனை  காணவில்லை என  புகார் அளிக்க வருகிறார் அருண் பாண்டியன்   .

அந்நேரத்தில் மர்ம நபர் ஒருவன்  எங்கோ இருந்து தொழில்நுட்ப ரீதியாக காவல் நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார்.

முணார் ரமேஷ் அவரது வழக்கமான டேபிளில் உட்கார அதனடியில் இருக்கும் வெடிகுண்டு அவர் எழுந்தால் வெடிக்கும் என மிரட்டுகிறான் .

அருண் பாண்டியனுடன் சேர்ந்து , திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

பிரதமர் வருகையையொட்டி பதற்றமான சூழ்நிலை உருவாகும் என்பதால்  வெளியே  தெரியாத வகையில் பிரச்சனையை சமாளிக்க காவல்துறை மேலிட அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் ,.

முடிவில் காவல் நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்தார்களா?

காணாமல் போன அருண் பாண்டியன் மகனின் நிலை என்ன ? என்பதை சொல்லும்  படம்தான்  ‘ரைட்’

சில காட்சிகளே திரையில் வந்தாலும் நாயகன் நட்டி  திரைக்கதைக்கு பலமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், மகன் காணவில்லை என்ற பரிதவிப்பையும், அவருக்கு என்ன ஆனது என்ற கவலையையும் தன் நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி,

கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் மூணார் ரவி, நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலராக நடித்திருக்கும் நடிகை என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையும் ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

காவல் நிலையத்தை வெடி குண்டு மிரட்டலால் தன் கட்டுபாட்டுக்குள் வைத்துள்ள மர்ம நபரின் கதையை மையமாக வைத்து  விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் எதிர்பார்க்க வைக்கும் காட்சிகளுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.

ரேட்டிங் - 3.2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: