ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் "சரக்கு"!
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக நடிக்கும் நாஞ்சில் சம்பத், ஒரு காட்சியில் 'சங்க காலம் என்கிற தங்க காலத்திலேயே, அவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா'? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்!
சமீபத்தில் வெளியான சரக்கு டிரைலரில் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது. அது தற்போது சர்ச்சைக்குரிய பெரும் பேசுபொருளாக மாறிவிட்டது!
அபரிமிதமான சென்சார் சர்ச்சைகளில் சிக்கி, ஒருவழியாக யு.ஏ சர்டிபிகேட் வாங்கப்பட்டது.
மன்சூர் அலிகானுடன் கே.பாக்யராஜ், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், பாரதி கண்ணன், வலினா, பபிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
டிசம்பர் 22'ல் உலகமெங்கும் 400' அரங்குகளில் திரையிட மன்சூர் அலிகான் திட்டமிட்டுள்ளார்!
Comments