தீபாவளி விருந்தாக, நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது !!
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், பான் இந்திய பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்தத் திரைப்படம் 2024 ஜனவரி 10 ஆம் தேதி, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
நவம்பர் 9 ஆம் தேதி கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசர் அறிவிப்பு போஸ்டரே படத்தின் பிரம்மாண்டத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது, ராம் சரண் முரட்டுத்தனமான அவதாரத்தில், லுங்கி மற்றும் பனியனுடன் ஒரு ரயில் பாதையில் அமர்ந்திருக்கும் போஸ்டர், ரசிகர்களுக்கு அற்புதமான தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் தமன், இந்த ஆக்ஷன் அதிரடி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, மிரட்டலான ரயில் சண்டை காட்சியை பற்றிக் கூறி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட "ஜருகண்டி ஜருகண்டி..." மற்றும் "ரா மச்சா மச்சா" பாடல்கள் ஏற்கனவே சார்ட்பஸ்டர் ஹிட்டாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற புகழ்மிகு இயக்குநர் ஷங்கர், ராம் சரணை இதுவரையில்லாத வகையில், மிக புதுமையான பாத்திரத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். கேம் சேஞ்சர் திரைப்படம், ராம் சரணின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையவுள்ளது. ஏஏ பிலிம்ஸ் வட இந்திய விநியோக உரிமையை, மிகப்பெரிய விலையில் வாங்கியிருப்பதிலிருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பின் அளவு வெளிப்படையாக தெரிகிறது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையை, சரிகம நிறுவனம் வெளியிடுகிறது.
வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நட்சத்திர நடிகர்கள், திறமையான குழுவினர் மற்றும் வசீகரிக்கும் கதைக்களத்துடன், இந்தப் படம் இந்திய சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. ராஜமௌலியின் RRR படத்திற்குப் பிறகு, வெளியாகும் ராம்சரண் படமென்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து வருகிறது.
திரைப்படம்: கேம் சேஞ்சர்
நடிகர்கள்: ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், நவீன் சந்திரா மற்றும் பலர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்
இயக்கம் : ஷங்கர் சண்முகம்
தயாரிப்பாளர்கள்: தில் ராஜு, சிரிஷ் எழுத்தாளர்கள்: சு.வெங்கடேசன், விவேக்
கதைக்களம்: கார்த்திக் சுப்புராஜ்
இணை தயாரிப்பாளர்: ஹர்ஷித்
ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு
இசை: எஸ்.தமன்
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
லைன் புரடியூசர்ஸ் : நரசிம்ம ராவ். என், எஸ்.கே.ஜபீர்
கலை இயக்கம் : அவினாஷ் கொல்லா
சண்டைக் காட்சி இயக்குநர் : அன்பறிவு
நடன இயக்குநர்: பிரபு தேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்டிஸ், ஜானி, சாண்டி
பாடலாசிரியர்கள்: ராமஜோகையா சாஸ்திரி, ஆனந்த ஸ்ரீராம், காசர்லா ஷியாம்
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)
Comments