top of page

அதிக அளவிலான ஆர்வத்தை உருவாக்கியுள்ள “சக்தி திருமகன்” டீசர்

mediatalks001

விஜய் ஆண்டனியின் புதிய அரசியல் படமான “சக்தி திருமகன்” டீசர் அதிக அளவிலான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது 

கேங்ஸ்டர், ஹஸ்ட்லர் அல்லது ட்ரிக்ஸ்டர் - அருண் பிரபு இயக்கிய விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் அற்புதமான டீசர் பார்க்கும்போது, படத்தின் கதை மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள்  எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருக்கும் என்பது குறித்து பார்வையாளர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. டீசரின் தொடக்கக் காட்சிகளில் கதையின் நாயகன் குணாதிசயங்களைப் பற்றி பல்வேறு கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன, அற்புதமான காட்சிகள் மற்றும் கூர்மையான எடிட்டிங் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. மிகக் குறுகிய நேரத்திலேயே முக்கியமான கதாபாத்திரங்களை காட்டிய  விதம், கதைநயத்தையும் அதன்னுடைய ஆழத்தையும் அதிகரிக்க செய்கிறது இதனால், ரசிகர்கள் முழுமையாக ஈர்க்கப்பட்டு, மேலும் அதிக ஆர்வத்தை  தூண்டும்  சூழ்நிலையை உருவாக்குகிறது.

2 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகள் கொண்ட "சக்தி திருமகன்" படத்தின் டீசர்,வழக்கமான டீசரை விட பார்வையாளர்களுக்கு அதிக ஆர்வத்தை அளிக்கிறது.

பல்வேறு பின்னணிகள், உயர்தர தொழில்நுட்ப கூறுகள் மற்றும் ஈர்க்கக்கூடிய உரையாடல்களுடன், இது நம்மை கவர்ந்திழுக்கிறது. விஜய் ஆண்டனி, டீசர் முழுவதும் அமைதியாக இருக்கிறார், ஆனால் தனது வெளிப்பாடுகள் மற்றும் இருப்பு மூலம் நம் கவனத்தை திறம்பட ஈர்க்கிறார்.

 டீசரை பார்த்து வியந்துபோன ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் ஏற்கனவே அதைப் பற்றிப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, படக்குழு படத்தை 'நியோ-பாலிட்டிகல்' என்று அங்கீகரித்ததன் மூலம், இது பாக்ஸ் ஆபிஸில் நிச்சயமாக பிளாக்பஸ்டர் ஹிட்டாக இருக்கும் என்ற நம்பிக்கை பார்வையாளர்களுக்கு அதிகரித்துள்ளது. 

சக்தி திருமகன் படத்தை எழுதி இயக்கியவர் அருண் பிரபு, அவரது முந்தைய படங்களான 'அருவி' மற்றும் 'வாழ்' ஆகியவை தலைசிறந்த படைப்புகளாகப் பாராட்டப்பட்டன. இந்தப் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது, மேலும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி பாட், ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்கிறார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page