top of page
mediatalks001

"தி ரோட்" – பட விமர்சனம்!

Updated: Oct 8, 2023


இரண்டாவதாக கர்ப்பமடையும் திரிஷா, சந்தோஷ் பிரதாப் தம்பதிக்கு பள்ளியில் படிக்கும் 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.


தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட திரிஷா கர்ப்பமாக இருப்பதால் சந்தோஷ் பிரதாப்பும் அவரது மகனும் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இரவு நேரத்தில் காரில் செல்கின்றனர்


மதுரை அருகே செல்லும் வழியில் எதிரில் வந்த தொழிலதிபரின் கார் நிலை தடுமாறி, சந்தோஷ் பிரதாப் வரும் வழியில் வந்து பெரும் விபத்தை ஏற்படுத்திவிடுகிறது.


இந்த விபத்தில் சந்தோஷ் பிரதாப்பும் அவரது மகனும் இறந்துவிடுகின்றனர்.


இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் திரிஷாவிற்கு கர்ப்பமும் கலைந்துவிடுகிறது. சில நாட்களுக்கு பின் தனது கணவர் இறந்த இடத்திற்குச் செல்லும் திரிஷாவிற்கு…இந்த விபத்து இயல்பாக நடந்ததா ? இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்டதா ? என சந்தேகம் எழுகிறது .

இந்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இன்ஸ்பெக்டரின் அலட்சியத்தால் கான்ஸ்டபிள் எம் எஸ் பாஸ்கரின் உதவியால் தீவிர விசாரணையில் திரிஷா இறங்கும்போது அதிர்ச்சிகரமான தகவல்களும் ,,, நடைபெறும் விபத்துகளுக்கு பின்னால் கொலைகார கூட்டம் செயல்படுவதை கண்டுபிடிக்கிறார் .


முடிவில் கொலைகார கூட்டத்தின் தலைவனாக இருப்பவன் யார் ? என்ன காரணத்திற்காக தன் ஆட்களை வைத்து இந்த விபத்துகளை நிகழ்த்துகிறான்? திரிஷா அவர்களை பழி வாங்கினாரா ?என்பதை சொல்லும் படம்தான் 'தி ரோட் '


கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரிஷா உணர்வுபூர்வமான நடிப்பில் தனது கணவன், மகன் இறந்ததை கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுவதும் அதிலிருந்து மீண்டு வர எடுக்கும் முயற்சியுடன் இந்த விபத்தினை நடத்தியவர்களை அதிரடி நாயகியாக பழி வாங்கும் காட்சிகளிலும் அனுபவ நடிப்பால் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்துகிறார் .


டான்சிங் ரோஸ் ஷபீர் உணர்ச்சிமயமான காட்சிகளிலும் , வில்லத்தனமான காட்சிகளிலும் இயல்பான நடிகராக மிளிர்கிறார் .


சந்தோஷ் பிரதாப் ,வேல இராமமூர்த்தி , மிரட்டும் வில்லியாக செம்மலர் அன்னம், வினோத் சாகர் ,விவேக் பிரசன்னா , மியா ஜார்ஜ் என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


சாம் சி எஸின் இசையும் ,கே ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையுடன் புதுமையாக வித்தியாசமான இரண்டு கதைகளை வெவ்வேறு களத்தில் பயணிக்க வைத்து திரைக்கதையில் இரண்டு கதைகளையும் ஒன்றாக இணைக்க வைத்து

முதல் பாதியில் இருந்த கதையின் வேகம் இடைவேளைக்கு பின் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் இரவு நேரத்தில் காரில் பயணிக்கும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் அருண் வசீகரன்.


ரேட்டிங் ; 3.5 / 5

Comments


bottom of page