MediaTalks Logo
Header Advertisement
reviews
1 November 2026 at 14:15•101 Views

‘சிங்காரம்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘சிங்காரம்’ - விமர்சனம்

1990 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடக்கும் கதையாக பொள்ளாச்சி அருகில் உள்ள அங்கலகுறிச்சி கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட குறவர் சமுகத்தை சேர்ந்த நாயகன் யோகி பாபு தனது தீபா சங்கர் அப்பா எம்.எஸ். பாஸ்கர் சகோதர ,சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

கிராமத்தில் மக்கள் மதிக்கும் பெரியவரான வேல ராமமூர்த்தி யோகி பாபுவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார்.

இந்நிலையில் சக மனிதர்கள் என்றும் பார்க்காமல் தங்கள் சமுகம் அடையாளம் இன்றி அவமானப்பட்டு பல இடங்களில் புறக்கணிக்கப்படுவதை எண்ணி வருந்தும் எம்.எஸ். பாஸ்கர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் .

இந்த நிலையில், எம்.எஸ். பாஸ்கர் வாங்கிய லாட்டரி சீட் மூலம் யோகி பாபு கோடீஸ்வரராகி விடுகிறார்

யோகி பாபு , தங்கள் உறவினர்களை கை விடாமல் பணக்கார வாழ்க்கை வாழ்ந்தாலும் அவரது சமுகத்தினரிடத்தில் காட்டப்படும் ஜாதி பாகுபாடு மட்டும் சில நேரங்களில் மாறாமல் இருக்கிறது.

தனக்கு கிடைத்த பணத்தில் போக்குவரத்து முதல் பள்ளி கல்வி வரை கிராம மக்களுக்கு நல்லதை செய்யும் யோகி பாபு பணத்தால் தனக்கு கிடைத்த அடையாளமும், மரியாதையும் தனது சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார் .

இந்நேரத்தில் எம் எல் ஏ தேர்தல் நடைபெற இருக்கும் சமயத்தில் தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கும் இரு வேறு கட்சிகளை சார்ந்த மாரிமுத்து படவா கோபியை எதிர்த்து யோகி பாபு தேர்தலில் போட்டியிடுகிறார் .

இறுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் கிராம மக்களின் ஆதரவில் யோகி பாபு வெற்றி பெற்றாரா ? குறவர் சமூகத்தினருக்கு கிடைக்க வேண்டிய அடையாளமும், மரியாதையும் யோகி பாபுவால் கிடைத்ததா ? என்பதுதான் ‘சிங்காரம்’ படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு அழுத்தமான நடிப்பில் கதாபாத்திரத்தை உணர்ந்து தனது வழக்கமான பாணியில் டைமிங் காமெடி வசனங்களால் சிரிக்க வைத்து உணர்வூப்பூர்வமான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .

வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரியா வின்சென்ட், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, செண்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம்.கணேஷ்கர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவும் ,சாம்.சி.எஸ் இசையும் படத்திற்கு பக்க பலம் .

உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையுடன் குறவர் சமூகத்தினர் எதிர்கொண்ட புறக்கணிப்பு மற்றும் பாதிப்புகளுடன் ஒரு சமூகத்தின் மனபோராட்டத்தை அழுத்தமான திரைக்கதையில் சொல்வதுடன் கல்வி மற்றும் அரசு பணி என்பது ஒரு சமூகத்தின் அடையாளத்திற்கு அவசியமானது போல அரசியல் அதிகாரம் என்பதும் மிக முக்கியமானது என்பதை கதையில் அழகாக சொல்லி அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கே.வி. கதிர்வேலு

மொத்தத்தில், ‘சிங்காரம்’ மக்களை காப்பவன்

ரேட்டிங் 3 . 5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: