MediaTalks Logo
Header Advertisement
cinema news
21 May 2026 at 12:57•8 Views

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!

திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.

இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

தொழில்நுட்பக் குழு :

தயாரிப்பு - பார்மன் பிக்சர்ஸ்

இணை தயாரிப்பாளர் - விவேக் கே.ஆர்

கதை, திரைக்கதை, இயக்கம் - பரணி சேகரன்

இசை - ஓஷோ வெங்கட்

ஒளிப்பதிவு - சாலமன் போஸ் டி.எஸ் / ஜபெஸ் கே கணேஷ்

கலை இயக்கம் - K.A. ராகவ குமார்

எடிட்டிங் - மணிகண்டன் எஸ்

ஆடை வடிவமைப்பு - சுகிர்தா பி

உடை அலங்காரம் - கோபால்

மேக்கப் - வினோத் சுகுமாரன்

சண்டைக்காட்சிகள் - ரக்கர் ராம்

VFX - சோசோ ஸ்டுடியோ

VFX - மேற்பார்வை - வெங்கடேஷ்

SFX - சிங்க் சினிமா

DI - ஃபயர்ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்

தயாரிப்பு மேற்பார்வை - சௌந்தரராஜன் / தமிழ்ச்செல்வன்

தயாரிப்பு நிர்வாகம் - முகேஷ் ஷர்மா

விளம்பர வடிவமைப்பு - நெக்ஸ்ட்ஜென் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு - யுவராஜ்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: