MediaTalks Logo
Header Advertisement
cinema news
21 September 2026 at 13:46•8 Views

ராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: 'மைசா' திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
ராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: 'மைசா' திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான 'மைசா' (Mysaa) டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்.

"நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்..." என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது. சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த போரில் அவர் வெறும் போராளி மட்டுமல்ல; போரின் போக்கையே தீர்மானிக்கும் பேராயுதமாக உருவெடுக்கிறார்.

கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக (Gond tribal woman) நடித்துள்ள ராஷ்மிகா, இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். பைக் ரேசிங் சாகசங்கள் முதல் ஆபத்தான நீருக்கடியிலான சண்டை காட்சிகள் (Underwater sequences) வரை அனைத்திலும் துணிச்சலாக நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக, கையில் அரிவாளுடன் நீருக்கடியில் அவர் வீற்றிருக்கும் காட்சி ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இயக்குநர் ரவீந்திரா புல்லேவின் பிரம்மாண்ட கற்பனையை, ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணாவின் அசத்தலான ஒளிப்பதிவும், சர்வதேச சண்டை பயிற்சியாளர் கெச்சாவின் கூர்மையான சண்டை வடிவமைப்புடன் ஜேக்ஸ் பிஜோயின் மிரட்டலான பின்னணி இசையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 27, 2026 அன்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மைசா திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், சிவா கந்துகுரி, கார்த்திக் ரஞ்சனி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம்: ரவீந்திரா புல்லே

தயாரிப்பாளர்கள்: அஜய் சாய்ரெட்டி, அனில் சையபுரெட்டி, வீரசாய் கோபா

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணா

இசை: ஜேக்ஸ் பிஜோய்

படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீனிவாஸ்

கலை இயக்கம்: G M சேகர்

சண்டைப்பயிற்சி: கெச்சா

மக்கள் தொடர்பு (PRO): சதீஷ் குமார், S2 மீடியா

மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி

டிஜிட்டல் ஏஜென்சி: ஹாஷ்டேக் மீடியா

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: