MediaTalks Logo
Header Advertisement
cinema news
16 February 2024 at 21:58•4 Views

‘ சைரன் ’ விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘ சைரன் ’  விமர்சனம்

ஆயுள் தண்டனை கொலை குற்றவாளியான ஜெயம் ரவி கைதியாக சிறையில் இருக்கிறார் .

இந்நிலையில் பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு பரோலில் இரண்டு வாரம் பரோலில் வெளியே வருகிறார்.

லோக்கல் ஸ்டேஷனில் தினசரி கையெழுத்து போடும் நிலையில் போலீஸ் பாதுகாப்பிற்காக யோகிபாபு உடன் இருக்கிறார்.

ஜெயம் ரவி கொலை குற்றவாளி என்பதால் கோபத்துடன் அவர் மீது வெறுப்பை மட்டுமே வைத்திருக்கும் அவரது மகள் அவரை பார்க்க விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.

இதற்கிடையே . ஜெயம் ரவி வெளிவந்த சில நாட்களிலேயே அரசியல் பெரும்புள்ளிகள் கொலை செய்யப்படுகின்றனர் .

அதற்கு ஜெயம்ரவிதான் காரணம் என சந்தேகப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ் அவரை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார்.

ஆனால், அந்த கொலைகளை தான் செய்யவில்லை என்று கூறும் ஜெயம் ரவி, அதற்கான சரியான ஆதாரங்களை நீதிபதி முன்பு சமர்ப்பித்து தப்பித்துவிடுகிறார்.

கொலைகளை செய்தது ஜெயம் ரவி தான் என்பதில் உறுதியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவருக்கு தண்டனை வாங்கி தரும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார்.

முடிவில் ஜெயம் ரவிதான் கொலையாளி என உறுதி செய்து கீர்த்தி சுரேஷ் அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா ?

எதற்காக ஜெயம் ரவி ஆயுள் தண்டனை பெற்றார்?ஜெயம் ரவி கொலை குற்றவாளியானதற்கான காரணம் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘ சைரன் ’

வித்தியாசமான பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைல் தோற்றத்தில் அதிகம் பேசாமல் அமைதியாக நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் ஜெயம் ரவி

கம்பிரமான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் உடல் மொழியில் வித்தியாசத்தைக் காட்டி நடிப்பில் கதாபாத்திரத்தை காப்பாற்ற போராடுவது திரையில் தெரிகிறது .

ஜெயம் ரவியின் மனைவியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் மனதில் நிற்கும்படி இயல்பாக நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி இதுவரை பேசாத வசனங்களை பேசி நடித்திருக்கிறார். காக்கி சட்டைப் போட்டுக்கொண்டு கருத்து சுதந்திரத்தை பேசி வந்த சமுத்திரக்கனி இதில் பேசும் வசனங்கள் அனல் கக்கும் நெருப்பாக இருக்கிறது.

ஜெயம் ரவிக்கு காவலராக வரும் யோகி பாபு படம் முழுவதும் காமெடி கலந்த நடிப்பை வைக்கும் சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லன்களாக நடிக்கும் அழகம்பெருமாள், அஜய், ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த துளசி, தங்கையாக நடித்த சாந்தினி, மகளாக நடித்த சிறுமி என அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை மிரட்டல் !

ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .

வேறு ஜாதி காதலை இயல்பாக சொல்வதுடன் அதை வைத்து நடக்கும் அரசியல் கலந்த கதையுடன் அப்பா – மகள் பாசத்துடன் மிக தெளிவான திரைக்கதையோடு அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பாராத திருப்பங்களோடு காட்சிப்படுத்தி அனைவரும் ரசிக்கும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ்.

ரேட்டிங் ; 3.1 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: