MediaTalks Logo
Header Advertisement
reviews
1 November 2026 at 22:46•141 Views

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ (Enemy Of The Smuggler) - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ (Enemy Of The Smuggler)  - விமர்சனம்

ராதிகா சரத்குமாரின் மகனான சரண் சக்தி இறந்து போன தன் அப்பா கட்டிய வீட்டை உறவினர்களிடம் இருந்து மீட்க துறைமுக சுங்கத்துறை அலுவலகத்தில் அதிகரிகாரிகளுக்கு உதவியாக சிறிய வேலைகளை செய்து வரும் இவர் சில மாதங்களுக்குள் தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக ஜெ.டி.சக்கரவர்த்தியிடம் சேர்ந்து தவறான வழியில் பயணிக்க முடிவு செய்கிறார். சரண் சக்திக்கு துணையாக பால சரவணன் இருக்கிறார் .

இந்நிலையில் துபாயில் இருக்கும் தாதாவான கடத்தல் மன்னன் லாலுக்கு ஆதரவாக ஜெ.டி.சக்கரவர்த்தி துறைமுக சுங்கத்துறையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்.

இதே சமயம் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவான லால் கோடிக்கணக்கில் விலைமதிப்புள்ள போதைப்பொருளை கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்த முயற்சி செய்கிறார் .

குஜராத் துறைமுகத்திற்கு வரும் லாலின் அந்த போதைப்பொருள் கண்டய்னரை வெற்றிகரமாக மீட்பதற்கான பணியை ஜெ.டி.சக்கரவர்த்தி, சரண் சக்தியிடம் ஒப்படைக்கிறார். அவரும், அவரது நண்பர் பாலசரவணனும் இணைந்து அந்த பணியை செய்து முடித்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள்.

இச் சூழ்நிலையில் போதைப்பொருள் கடத்தப்படும் தகவலை அறிந்த இந்திய வருவாய் சேவை அதிகாரி சமயா முரளி , கடத்தல் பொருளை மீட்டு,கடத்தலில் ஈடுபடும் கும்பலை பிடிக்க அதிரடியாக களத்தில் இறங்குகிறார் .

இறுதியில் குஜராத் துறைமுகத்திற்கு வரும் அந்த போதைப்பொருள் கண்டய்னரை நாயகன் சரண் சக்தி சுங்கத்துறை அதிகாரிகளை ஏமாற்றி வெளியே கொண்டு வந்தாரா ? போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவான லாலுடன் சேர்ந்து ஜெ.டி.சக்கரவர்த்தியை சமயா முரளி கைது செய்தாரா ? இல்லையா ? என்பதுதான் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ படத்தின் மீதி கதை .

நாயகனாக சரண் சக்தி அழுத்தமான கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் , காதல்,செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேகா அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .

வில்லன்களாக லாலும் ,ஜெ.டி.சக்கரவர்த்தியும் அனுபவம் வாய்ந்த நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர் .

இந்திய வருவாய் சேவை அதிகாரியாக நடித்திருக்கும் சமயா முரளி கம்பீரமான நடிப்பில் பாராட்டுக்குரிய நடிப்பில் திறமையாக நடித்துள்ளார் .

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, நாயகியின் அண்ணனாக நடித்திருக்கும் காளி வெங்கட், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், மைம் கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நடிப்பில் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள

சாம் டேனியலின் இசையும் , ஒளிப்பதிவாளர் கா. வின் பாஸ்கரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

கடத்தலை மையமாக கொண்ட கதையுடன் கடல் வழி கடத்தல் மற்றும் துறைமுகங்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களுடன் கடல் வழி கடத்தலில் துறைமுக சுங்கத்துறையின் செயல்பாடுகளில் நடக்கும் மோசடிகளை சுவாரஸ்யமாக சொல்வதுடன் விறு விறுப்பான திரைக்கதையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சினிமாவுக்கான சில கற்பனைகளுடன் அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சமயா முரளி .

மொத்தத்தில், ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ (Enemy Of The Smuggler) ரசிக்கலாம்

ரேட்டிங் 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: