MediaTalks Logo
Header Advertisement
cinema news
1 November 2026 at 22:53•133 Views

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜெ.எம்.பஷீர் நடிக்கும் தேசிய தலைவர் 2

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜெ.எம்.பஷீர் நடிக்கும் தேசிய தலைவர் 2

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான தேசிய தலைவர் தேவர் பெருமான் திரைப்படம், 2025 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி அன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆர். அரவிந்தராஜ். இசை. ஸ்ரீகாந்த் தேவா மக்கள் தொடர்பு.நிகில் முருகன் இப்படத்தை A. M. சௌத்ரி தயாரிக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற கலவரத்தை மையமாகக் கொண்டு, வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

முந்தைய பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண் டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: