MediaTalks Logo
Header Advertisement
cinema news
4 March 2024 at 15:43•12 Views

’போர்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’போர்’ - விமர்சனம்

பாண்டிசேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிப்பில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவரான அர்ஜூன் தாஸ் மீது முதலாமாண்டு மாணவரான காளிதாஸ் ஜெயராமுக்கு தனிப்பட்ட முறையில் பகை இருக்கிறது. சிறு வயது இருவருக்கும் பகைமை இருப்பதால் அர்ஜூன் தாஸை பழி தீர்க்க நினைக்கிறார் காளிதாஸ் ஜெயராம் .

காளிதாஸ் ஜெயராம் தொடர்ந்து அர்ஜூன் தாஸ் சம்பந்தப்பட்ட ஆட்களை சீண்டுவதோடு அதை கல்லூரி மோதலாகவும் மாற்ற முயற்சிக்கிறார். காளிதாஸ் ஜெயராமின் செயல்பாட்டை புரிந்துக்கொண்ட அர்ஜூன் தாஸ் எல்லாம் தெரிந்தும் ஒதுங்கி செல்கிறார்.

மறுபக்கம் கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தலில் அரசியல் தலைவரின் மகளை எதிர்த்து போட்டியிடும் பெண் மீது ஆசிட் வீசப்படுகிறது

முடிவில் நீதி கேட்டு போராடும் மாணவர்களுக்கு நியாயமான நீதி கிடைத்ததா?

அர்ஜூன் தாஸ் – காளிதாஸ். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் முடிவுக்கு வந்ததா? என்பதை சொல்லும் படம்தான் ’போர்’

நாயகனாக நடிக்கும் அர்ஜூன் தாஸ் வழக்கும் போல மிரட்டும் காந்த குரலில் கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராமின் பார்க்கும் தோற்றத்துக்கு மாற்றான கதாபாத்திரம்.அதற்கு தகுந்தாற்போல் நடிப்பை கொடுத்திருக்கிறார்..காதல் காட்சிகளில் நன்றாகப் பொருந்தியிருக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் டி.ஜெ.பானு மற்றும் சஞ்சனா நடராஜன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

வில்லியாக நடித்திருக்கும் அம்ருதா, இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ்-ன் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்) பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் ஜிஷ்மி காளித் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .

கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவ கோஷ்டிகளுக்குள் நடக்கும் சாதி அரசியல், காதல்,மோதல் என அனைத்தும் கதையுடன் கலந்த இயல்பான திரைக்கதையில் ரசிகர்கள் ரசிக்கும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிஜாய் நம்பியார்

ரேட்டிங் : 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: