MediaTalks Logo
Header Advertisement
reviews
6 November 2026 at 19:59•49 Views

‘மூக்குத்தி அம்மன் 2’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘மூக்குத்தி அம்மன் 2’  - விமர்சனம்

VELS Film International Limited சார்பாக டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் குஷ்பு சுந்தர் ,குஷ்மிதா கணேஷ் , விக்னேஷ் சிவன் ஆகியோரின் இணை தயாரிப்பில் சுந்தர் சி இயக்குநர் இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

குஷ்பு, சினேகா, ஊர்வசி, யோகி பாபு, YG மகேந்திரன், இனியா, மைனா நந்தினி, கருடா ராம், அபிநயா, ஸ்ருதி.எஸ், சிங்கம்புலி அண்ணாவி, வி.ஆர். சுவாமிநாதன், சிவகுமார்.எஸ், சுனில் வர்மா இந்துகுரி, வர்ஷினி வெங்கட், பாலா கருப்பையா, ஆனந்த அதிஷ்ட லட்சுமி, நிதின் சத்யா, தேப்லினா சக்கி ஆகியோர் நடித்துள்ளனர் .

சென்னையில் பெண் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் நயன்தாரா இரவில் தூங்கும்போது குதிரையுடன் வீரர்களின் நிழலான உருவங்களுடன் மயிலாஞ்சி கிராமத்தின் தொடர்புடைய திகிலான கனவுகள் அவருக்கு தினமும் வருகிறது .

இந்நிலையில் மந்திரவாதி கருடா ராமின் மகனான நிதின் சத்யா பள்ளி சிறுமியை கடத்தி சென்று நரபலி கொடுக்க முயலும்போது நயன்தாரா அந்த சிறுமியை உயிருடன் காப்பாற்ற , உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறும் நேரத்தில் தனது விருப்பமாக பணியிட மாறுதல் கேட்டு மயிலாஞ்சி கிராமத்திற்கு செல்கிறார் .

இந்நேரத்தில் மயிலாஞ்சியில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த ரெஜினா கசாண்ட்ராவை மற்றொரு மந்திரவாதியான சுனில் மந்திர சக்தி மூலம் மீண்டும் உயிர்த்தெழ செய்கிறார் .

தீய சக்தியான ரெஜினா கசாண்ட்ரா 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் வாழ்ந்த காதலன், நிகழ் காலத்தில் அரசியல்வாதி பழ கருப்பையாவின் மகனான துனியா விஜய்யுடன் சேர்ந்து நயன்தாராவை பழி தீர்த்து அவரை அழிக்க நினைக்கிறார் .

இறுதியில் நாயகி நயன்தாராவை என்ன காரணத்திற்காக அழிக்க துடிக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா? சாதாரண பெண் போலீஸ் கான்ஸ்டபிளான நயன்தாரா யார் ? அவரது பின்னணி என்ன ? என்பதுதான் தீய சக்திகள், மந்திரம், தெய்வீகப் போராட்டம் என விறு விறுப்பான பிரம்மாண்ட ஃபேண்டஸி படம்தான் ‘மூக்குத்தி அம்மன் 2’

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா கம்பீரமாக மிரட்டலான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தீய சக்தியாக ரெஜினா கசாண்ட்ரா வில்லியாக திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .

சிறப்பு தோற்றத்தில் வரும் குஷ்பு, சினேகா, நயன்தாராவின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி, யோகி பாபு, YG மகேந்திரன், இனியா, மைனா நந்தினி, கருடா ராம், அபிநயா, ஸ்ருதி.எஸ், சிங்கம்புலி அண்ணாவி, வி.ஆர். சுவாமிநாதன், சிவகுமார்.எஸ், சுனில் வர்மா இந்துகுரி, வர்ஷினி வெங்கட், பாலா கருப்பையா, ஆனந்த அதிஷ்ட லட்சுமி, நிதின் சத்யா, தேப்லினா சக்கி என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் , இறுதியில் வரும் பாடல் பக்தர்களை ஓங்காரமாய் ஆட வைக்கும். பின்னணி இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகளில் பிரம்மாண்டம் .

தெய்வ சக்திக்கும் - தீய சக்திக்கும் நடக்கும் போராட்டத்தை மையமாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் பிரம்மாண்டமான அரசவை , தீய சக்திகள், மந்திரம், தெய்வீகப் போராட்டம் என ஒரு பிரம்மாண்டமான ஃபேண்டஸி உலகத்துக்குள் கதையை நகர்த்துவதுடன் வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் ஆன்மிக ஃபேண்டஸி படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் C

ரேட்டிங் - 4 / 5

மொத்தத்தில் - ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆன்மீக விருந்து

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: