MediaTalks Logo
Header Advertisement
reviews
7 November 2026 at 18:41•15 Views

‘இராமாயணா’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘இராமாயணா’ - விமர்சனம்

இதிகாசத்தில் காவியமாக போற்றப்படும் ராமாயணத்தை இன்றைய தொழிற் நுட்பத்தில் ஹாலி வுட் படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ், வி எஃப் எக்ஸ் காட்சிகளின் பிரம்மாண்டத்தோடு பிரமிக்க வைக்கும் திரைப்படமாக இயக்கியுள்ளார் நித்தேஷ் திவாரி .

அயோத்தி மன்னரின் மகனான இளவரசர் ராமர் (ரன்பீர் கபூர்) போர் குணம் நிறைந்த வீரனாக , ஒழுக்கத்தில் சிறந்த ஏக பத்தினி விரதனாக ,தர்மத்தின் தலைவனாக மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார் .

மிதிலை நாட்டின் மன்னனான ஜனகரின் மகளான இளவரசி சீதையை (சாய் பல்லவி ) திருமணம் செய்துகொள்ளும் ராமர் அயோத்தி நாட்டின் அரசராக முடி சூட்டி கொள்ளும் தருணத்தில் தசரதனின் முன்றாவது மனைவியான கைகேயியின் ன் சூழ்ச்சியினால் மனைவி சீதை மற்றும் தம்பி லக்ஷ்மணன் உடன் 14 ஆண்டு காலம் துறவி கோலத்துடன் வனவாசம் செல்கிறார் .

இலங்கையை அரசாளும் ஆளுமைமிக்க தலைவனான இராவணனின் தங்கை சூர்ப்பனகையால் ( ரகுல் ப்ரீத் சிங்) உண்டாகும் பிரச்சனையில் ராமரை பழி தீர்க்க இளவரசி சீதையை இலங்கைக்கு கடத்துகிறார் இராவணன்.

வீரமான சபதத்துடன் இராவணனை அழித்து இளவரசி சீதையை மீட்டு வர இலங்கைக்கு தம்பி லக்ஷ்மணனுடன் செல்ல ராமர் முடிவு செய்யும் நிலையில் ‘இராமாயணா’ முதல் பாகம் முடிவடைகிறது.

ஸ்ரீராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரன்பீர் கபூர், புன்னகை தவழும் அமைதியான நடிப்பிலும் , போர்க்குணம் கொண்ட ஆக்ரோஷ நடிப்பிலும் , மிக சிறப்பான நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெறுகிறார் .

இலங்கையை அரசாளும் இராவணனாக யாஷ் கம்பீரமான வில்லனாக ஆக்ரோஷ நாயகனாக திரைக்கதைக்கு பக்க பலமாக நடிப்பில் மிரட்டுகிறார்

இளவரசி சீதையாக சாய் பல்லவி, அழுத்தமான கதாப்பாத்திரத்தில் இயல்பான நடிப்பில் சிரிப்புடன் அமைதியான முகபாவனைகளில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார் .

தசரதனாக நடித்திருக்கும் அருண் கோவில், லக்‌ஷ்மண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி துபே, கைகேயியாக நடித்திருக்கும் லாரா தத்தா, சூர்ப்பனையாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங், மண்டோதரியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், கவுசல்யாவாக நடித்திருக்கும் இந்திர கிருஷ்ணன் என நடித்த நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக உள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் பங்கஜ் குமார் மற்றும் மகேஷ் லிமாயே ஆகியோரின் ஓளிப்பதிவில் பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டத்தை காட்சிகளாக படமாக்கியுள்ளனர் .

ஏ. ஆர். ரஹ்மான் - ஹான்ஸ் சிம்மர் இசை படத்திற்கு கூடுதல் பலம் .

அனைவராலும் அறியப்பட்ட இதிகாசமான இராமாயணத்தின் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் சிறப்புகளை வியக்க வைக்கும் பிரம்மாண்ட காட்சிகளாக வடிவமைத்து ஹாலிவுட் படங்களுக்கு இணையாக சிறப்பான கிராபிக்ஸ், வி எஃப் எக்ஸ் காட்சிளுடன் இரண்டாம் பாகத்தை ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் நித்தேஷ் திவாரி.

மொத்தத்தில் - ‘இராமாயணா’ ஆக்க்ஷனுடன் ஆன்மீக பிரம்மாண்டம்

ரேட்டிங் - 4 / 5

.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: