MediaTalks Logo
Header Advertisement
cinema news
7 November 2026 at 19:33•109 Views

கமல்ஹாசனின் பிறந்தநாளில் தொடங்கிய ‘சண்டியர்’ படப்பிடிப்பு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
கமல்ஹாசனின் பிறந்தநாளில் தொடங்கிய  ‘சண்டியர்’ படப்பிடிப்பு

திரு. கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்தச் சிறப்புமிக்க நாளில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு முன்னதாக, நேற்று (நவம்பர் 6) தயாரிப்பாளர்கள் இப்படத்தின் தலைப்பான ‘சண்டியர்’ என்பதை வெளியிட்டனர். இந்தத் தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்துக்கான கமல்ஹாசனின் Look Test புகைப்படங்கள் பெரியளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 7)படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ‘சண்டியர்’ தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

தனித்துவமான கதைசொல்லல் முறைக்கு பெயர் பெற்ற இயக்குனர் எஸ்.யு. அருண் குமார், தலைமுறைகளைக் கடந்து சினிமாத் துறையில் தனது பன்முகத்தன்மை, கலைத் திறன் மற்றும் புதுமைகளுக்காகக் கொண்டாடப்படும் திரு. கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ளார். இந்த இரு படைப்பாளிகளின் கூட்டணியில் உருவாகும் ‘சண்டியர்’ திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image
Image

‘சண்டியர்’ திரைப்படத்தில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியாக, அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், அன்பரிவ் சண்டை பயிற்சி இயக்குநர்களாகவும், கே. எஸ். சுனில் ஒளிப்பதிவாளராகவும், சி. எஸ். பாலச்சந்தர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் மற்றும் அம்ரிதா ராம் ஆடை வடிவமைப்பாளராகவும் இந்தப் படத்தில் பணியாற்றுகின்றனர்.

‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

நவம்பர் 6-இல் தலைப்பு வெளியீடு மற்றும் நவம்பர் 7-இல் படப்பிடிப்புத் தொடக்கம் ஆகியவற்றுடன், இத்திரைப்படம் திரு. கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு மைல்கல்லாகவும், அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கூட்டணிக்கு ஒரு சிறந்த தொடக்கமாகவும் அமைந்துள்ளது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: