MediaTalks Logo
Header Advertisement
reviews
13 November 2026 at 13:59•135 Views

‘ஜான் டோ’ (John Doe) - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 ‘ஜான் டோ’ (John Doe)  - விமர்சனம்

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’ (John Doe)

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள கடம் புழா காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணி புரிகிறார் அர்ஜுன் தாஸ்.

எல்லைப் பகுதியில் அர்ஜுன் தாஸ் பணியில் இருக்கும்போது அவர் கண்ணெதிரே கார் ஒன்று ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. அதில் ஒரு சிறுவனது உடல் கிடைக்கிறது.

தீவிர விசாரணையில் இறங்கும் கேரள காவல்துறை அதிகாரி அர்ஜுன் தாஸ் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவை வைத்து சிறுவனின் மரணம் விபத்து அல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதை கண்டுபிடிக்கிறார்.

இந்நிலையில் துபாயில் வாழ்ந்து வந்த ஸ்ரிஷ்டி.ஒய் மகள் ஜாரா வினீத் சந்தோக் மற்றும் மகனான சிறுவன் நீரவ்.எஸ்ஸுடன் மலை கிராமமான குறிஞ்சி மேட்டுக்கு குடியேறுகிறார் .

ஒரு இரவு நேரத்தில் ஜாரா வினீத் சந்தோக்குடன் ஐஸ் கிரீம் சாப்பிட செல்லும் சிறுவன் நீரவ்.எஸ் காணாமல் போகிறார் .

எங்கு தேடியும் சிறுவன் நீரவ் கிடைக்காததால் குறிஞ்சி மேடு காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சனா நடராஜனிடம் காணாமல் போன தன் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் தருகிறார் ஸ்ரிஷ்டி.ஒய் .

மற்றொரு பக்கம் அர்ஜுன் தாஸ் தன் விசாரணையில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிறுவன் ஒருவர் காணாமல் போக, அதற்கும் கேரளாவில் நடந்த சிறுவன் கொலைக்கும் தொடர்பு இருக்குமா என்கிற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் உள்ள குறிஞ்சி மேடு காவல் நிலையத்திற்கு விரைகிறார் .

இச் சூழ்நிலையில் சாலையோரத்தில் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுவன் நீரவ் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர் .

குறிஞ்சி மேடு காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை அதிகாரி சஞ்சனா நடராஜனை சந்திக்கும் அர்ஜுன் தாஸுக்குகேரளத்தில் நடந்த கொலை வழக்கின் விசாரணைக்கு உதவியாக சஞ்சனா நடராஜன் இருக்கிறார் .

ஒரு கட்டத்தில் ஸ்ரிஷ்டி.ஒய்யின் வீட்டில் சிறுவன் நீரவ் துங்குவதை பார்த்து அதிர்ச்சியடையும் அர்ஜுன் தாஸுக்கு இரண்டு சம்பவங்களையும் செய்தது ஒரு சைக்கோ கொலையாளி என்பதை தனது புலனாய்வில் கண்டுபிடிக்கிறார்.

இறுதியில் சிறுவர்களை கடத்தி காருடன் ஏரியில் கவிழ்த்து கொலை செய்யும் மர்ம கொலையாளி யார் என்பதை அர்ஜுன் தாஸ் கண்டுபிடித்தாரா ? எதற்காக ஏன் சிறுவர்களை மட்டும் குறி வைத்து இந்த கொலைகளை அந்த மர்ம நபர் செய்கிறார் ? என்பதுதான் ‘ஜான் டோ’ படத்தின் மீதி கதை .

நாயகனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், கம்பீர குரலில் உணர்வுபூர்வமாக குற்றவாளிகளை பேச வைக்கும் காட்சிகளிலும் , அதிகாரியாக குற்றவாளியை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கும் காட்சிகளிலும் ,சஞ்சனா நடராஜன் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் அனுபவ நடிகராக சிறப்பான நடிப்பை இயல்பாக நடித்துள்ளார் .

தமிழக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன் கண்டிப் பான அதிகாரியாக ,காக்கி சட்டைக்குள்ளும் மென்மையான காதல் உண்டு என்பதை அழகாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார் .

அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரிஷ்டி.ஒய், லக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாரா வினீத் சந்தோக், ஹிருதய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் நீரவ்.எஸ்,, அர்ஜுன் தாஸின் இளம் வயது அம்மாவாக நடித்திருக்கும் விஜே அர்ச்சனா சந்தோக் , தந்தையாக நடித்திருக்கும் படவா கோபி, கார்த்திக் குமார்,அனுபமா குமார் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வு.

முஜீப் மஜீத் இசையும் ,ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

மர்மமாக காருடன் சிறுவர்களை ஏரியில் கவிழ்த்து கொலை செய்யும் சைக்கோ கில்லரின் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான திரைக்கதையில் சைக்கோ கொலையாளி என்கிற பார்வையில் பார்வையாளர்களை பயமுறுத்தும் காட்சிகள் எதுவும் இல்லாத மன ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகளின் விளைவுகளை அழுத்தமான காட்சிகளாக அமைத்ததுடன் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் சைக்கோ கிரைம் திரில்லர் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மதுமிதா.

மொத்தத்தில், ‘ஜான் டோ’ வித்தியாசமான கதையம்சம் கொண்ட சைக்கோ திரில்லர்

ரேட்டிங் 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: